திருச்சி சோனா மீனா திரையரங்கை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினரால் பரபரப்பு-தமிழக அரசு கிங்டம் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை

தற்பொழுது திரையரங்கில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் விஜய் தேவர் கொண்ட நடித்த கிங்டம் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் திருச்சி சோனா மீனா திரையரங்கை முற்றுகையிடுவோம் என அறிவித்திருந்தனர்.
கிங்டம் திரைப்படத்தில் ஈழத் தமிழர்களை குறித்து அவதூறான காட்சிகள் இருப்பதாக கூறி இத்திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் தமிழகத்தில் திரையிட்ட அனைத்து இடங்களிலும் இத்திரைப்படத்தை உடனே நிறுத்த வேண்டும் எனக் கூறி நாம் தமிழர் கட்சியினர் இன்று திரையரங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி சோனா மீனா திரையரங்கிற்கு வந்த நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சரவணன் தலைமையிலான அக்கட்சியினர் திரையரங்கிற்கு சென்று மேலாளரிடம் திரைப்படத்தை நிறுத்த வலியுறுத்தி மனு அளித்தனர். மேலும் திரையரங்க வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கிங்டம் திரைப்படத்தின் பதாகைகளையும் அகற்றுமாறு கூறியுள்ளனர்.

திரையரங்கு தரப்பில் பதாகைகளை அகற்றி விடுவோம், திரையரங்க உரிமையாளர்களிடம் பேசி திரைப்படம் நிறுத்துவது தொடர்பாக ஆலோசிக்கிறோம் எனக் கூறியதன் அடிப்படையில் அவர்கள் கலந்து சென்றனர்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சரவணன் கூறும் பொழுது தமிழக முழுவதும் இப் திரைப்படத்தை உடனடியாக திரையரங்குகளில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும், திரையரங்கு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்ற வேண்டும் எனவும் அப்படி இல்லை என்றால் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனக் கூறினர்.மேலும் தமிழக அரசு இத்திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சியினரின் கோரிக்கையை அடுத்து திரைப்படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது மேலும் திரையரங்க வளாகத்தில் இருந்த பேனர்களை திரையரங்க ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
திருச்சி சோனா மீனா திரையரங்கை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினரால் பரபரப்பு






Comments