தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே பந்தநல்லூர் செட்டிக்குளத் தெருவைச் சேர்ந்தவர் பரத்குமார் (22). இவர் திருச்சி தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர் பயிற்சிப் பள்ளியில் ஒரு மாத காலமாக பயிற்சி பெற்று வந்தவர்.
இந்நிலையில் 13.04.2022 இரவு விடுப்பில் வீட்டுக்கு வந்த இவர் வீட்டின் அருகில் உள்ள வாடகை பாத்திரக் குடோனில் கயிற்றால் தூக்குமாட்டி இறந்து உள்ளார். இதுக்குறித்து தகவலறிந்து வந்த பந்தநல்லூர் போலீசார் பயிற்சி காவலர் பரத்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments