Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

அவதூறு பேட்டி அளித்த திருச்சி சூர்யாவை கைது செய்ய வேண்டும் – விசிகவினர் புகார்

திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாநகர மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ் தலைமையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினியிடம் புகார் மனு அளித்தனர். அம்மனுவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர மேற்கு மாவட்ட செயலாளராக மக்கள் பணி செய்தும் வருகிறேன்.

MGR TV என்ற சமூக வலைதளத்தில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி.சிவா அவர்களின் மகனும் பி.ஜே.பி கட்சியை சார்ந்த நபருமான திருச்சி சூர்யா விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித்தமிழர் முனைவர்.தொல்.திருமாவளவன் அவர்களை ஆபாசமாகவும், அருவருக்கதக்க வார்த்தைகளில் நேர்காணல் கொடுத்துள்ளார்.

தலைவருடைய சாதியை பற்றி இழிவாகவும் மேலும் ஆளுங்கட்சி, எதிர்கட்சி ஆகிய கட்சிகள் போடும் எலும்பு துண்டுகளுக்கு அலையும் நாய்கள் என்று மிகவும் கேவலமான வார்த்தையை பயன்படுத்தி அருவருக்க தக்க வகையிலும் நேர்காணல் கொடுத்துள்ளார். மேலும் அந்த நேர்காணலில் சாதி கலவரத்தினை தூண்டும் வகையில் தான் சார்ந்த கட்சிக்காரர்களை கொண்டு வெட்டுவோம், குத்துவோம் என்றும் நேருக்குநேர் மோதிக்கொள்ள தயார் என்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நேர்காணல் அளித்துள்ளார்.

மேலும் எங்கள் கட்சியின் தலைவர் பட்டியல் இனத்தை சார்ந்தவர் என்பதனை நன்கு அறிந்துகொண்டு சாதிய உள்நோக்கோடு தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறார். மேலும் தொடர்ச்சியாக இதுபோன்ற பதிவுகளை சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவு செய்து எங்கள் கட்சியினருக்கும், மற்றவர்களுக்கும் பகைமை ஏற்படுத்தி கலவரத்தை தூண்டி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் திருச்சி சூர்யா பேசியுள்ளார்.

எனவே அம்மா அவர்கள் எங்கள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பட்டியல் இனத்தை சார்ந்தவர் என்பதை தெரிந்தே சாதிய உள்நோக்கத்துடன் அவரையும் வி.சி.க கட்சியை சேர்ந்த பொறுப்பாளர்களையும் இழிவுபடுத்தியும் மேலும் எங்கள் கட்சியையும் மற்ற அமைப்புகளுக்கும் பகைமை உணர்வை ஏற்படுத்தி பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து சட்ட ஒழங்கு பிரச்சனை ஏற்படுத்தியும் அருவருக்கதக்கவகையில் கேவலமாக பேசிய திருச்சி சூர்யா மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அம்மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் திருச்சி – கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், மாவட்டச் செயலாளர்கள் கனியமுதன், முசிறி வழக்கறிஞர் கலைச்செல்வன், குருஅன்புச்செல்வன், இளம் சிறுத்தை பாசறையில் மாநில துணைச் செயலாளர் அரசு, மாநில பொறியாளர் அணியின் துணைச்செயலாளர் இதில் சந்திரசேகரன், நிர்வாகிகள் சிந்தை சரவணன்,

வழக்கறிஞர்கள் பழனியப்பன் தீனா, ஏர்போர்ட் மாரியப்பன் பெரியசாமி, மகளிர் விடுதலை இயக்க நிர்வாகி கஸ்தூரி உட்பட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *