திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் ஹாக்கர்ஸ் கிளப், ரோட்டரி சங்கம் சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சிராப்பள்ளியிலிருந்து சென்னை வரை செல்லும் ஸ்கேட்டிங் பேணி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் போதை பொருள் முழுவதுமாக ஒழிக்க வேண்டும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. தற்பொழுது பொதுமக்களிடையே போதை பொருளை தடுக்க வலியுறுத்தி திருச்சியில் இருந்து சென்னை வரை 70-க்கும் மேற்பட்ட ஹாக்கர்ஸ் கிளப் மாணவர்கள் ஸ்கேட்டிங் மூலம் விழிப்புணர்வு பயணத்தை மேற்கொள்கின்றனர்.


திருச்சி மாவட்டத்தில் ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. தற்போது திருச்சியில் இருந்து சென்னை வரை போதைப்பொருள் தடுக்க இந்த பேரணி மக்களிடையே மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் என தெரிவித்தார்.

இந்நிகிழ்வில் ஹாக்கர்ஸ் கிளப் பசூல் கரீம், Pet galaxy founder மற்றும் கால்நடை மருத்துவர் கணேஷ்குமார் (BNI Emperor), சுப்பையா நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments