கடந்த 26.12.2025 அன்று நடைபெற்ற மாவட்ட குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மாநகர் மாவட்ட செயலாளர் கோவி.வெற்றி செல்வன் வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு தமிழ்நாட்டின் மத்தியப் பகுதியில் திருச்சி மாவட்டம் அமைந்துள்ளது, பல மாவட்டங்களுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. நாள்தோறும் ஏராளமான மாவட்டங்களை சார்ந்த பயணிகள் மற்ற மாவட்டங்களுக்கு செல்ல திருச்சி மாவட்டத்திலிருந்து செல்லும் சூழல் உள்ளது, திருச்சி மாவட்டத்தின் மக்கள் தொகை பெருக்கமும், வாகன பெருக்கமும் அதிகரித்து வருகிறது. இதனால் திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
மலைக்கோட்டை மாநகரமான திருச்சி மாநகருடைய பிரதான நுழைவு வாயில் பகுதி திருச்சி காவேரி மேம்பாலம். இந்த பாலம் தான் திருச்சி மாநகருக்குள் வாகனங்களை இணைக்கும் பிரதான சாலையாக அமைந்துள்ளது. இந்த பகுதியில் பள்ளி கல்லூரிகள் அதிகம் இருப்பதால் சத்திரம் பேருந்து நிலையம், சிந்தாமணி அண்ணா சிலை, ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் காணப்படுகிறது.
மேலும் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு வந்த பிறகு புதிதாக தேசிய நெடுஞ்சாலைகளிலும் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் மக்களை இறக்கி விடுவதற்காக சஞ்சீவி நகர் சந்திப்பு, பால்பண்ணை, டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நெரிசல் ஏற்படுகிறது.
திருச்சி மாநகரத்தின் மையப் பகுதியில் காந்தி சந்தை அமைந்துள்ளது.
இந்த காந்தி சந்தையில் இருந்து திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலை வரும் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் பால்பண்ணை கடந்துதான் திருச்சி மாநகரத்துக்குள் செல்ல வேண்டும். பால்பண்ணை முதல் திருச்சி மாநகர் வரையிலும் மற்றும், பாலக்கரை, பிஷப் ஹிபர் வயலூர் சாலை உள்ளிட்ட சந்திப்புகளிலும் நெரிசல் காரணமாக வாகன பயண நேரம் அதிகரிப்பதோடு, அதிகமான விபத்துகளினாலும் மக்கள் கடுமையான இன்னலுக்கு ஆளாகியுள்ளார்.
மேற்கண்ட போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்கு ரயில்வே துறையின் சார்பாக நடைபெற்று வரும் மாரிஸ் மேம்பாலம், திருச்சி ரயில்வே ஜங்ஷன் மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகமாகவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது கட்டுமான பணியை விரைவுப் படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து வெளிப்புற சாலைகளில் இருந்து இயக்கப்படும் பிற மாவட்ட பேருந்துகளை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கினால் சத்திரம் பேருந்து நிலையத்தை சுற்றி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம்.
பால்பண்ணையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தற்காலிகமாக குறைத்திட ஆற்றுப்பாலத்தை ஒட்டி ஆயிஷா நகர் வழியாக செல்லும் சாலையை சரி செய்து நெடுஞ்சாலையின் அணுகு சாலையோடு இலகு ரக வாகனங்களை சென்றிட சாலை அமைத்துக் கொடுக்கலாம்,கனரக வாகனங்களை துவாக்குடியிலுள்ள அரைவட்ட சாலையின் வழியாக மாற்றிவிட்டால் ஓரளவு பால்பண்ணையில் வாகன நெரிசலை குறைக்க முடியும்.
பொன்மலை ஜி கார்னர் பகுதியில் சுரங்கபாதை அமைத்தும், சஞ்சீவி நகர் இணைப்பு சாலையில் மேம்பாலம் அமைத்து விபத்துகளையும் வாகன நெரிசல்களையும் குறைக்கலாம்.
காவேரி மேம்பாலத்தின் புதிய மேம்பால பணியை விரைவுபடுத்தி சாலைகளை விரிவுபடுத்தலாம்.
வயலூர் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைத்திட உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையின் சாலையை மேம்படுத்தி போக்குவரத்தை மாற்றம் செய்து நெரிசலை குறைக்கலாம்.
நகரத்திற்குள் பணி நேரங்களில் கனரக வாகனங்களை அனுமதிக்காதே.
அனைத்து கட்சி மற்றும் அதிகாரிகளை கொண்ட கூட்டத்தை நடத்தி ஆலோசனைகளை பெற்று போக்குவரத்து நெரிசலை போக்கிடு .
திருச்சி மாநகரின் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை குறைக்க உடனடியாக செயல்படுத்த வேண்டிய பணிகளை செயல்படுத்திட நிர்வாக ரீதியான அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து தினமும் நடைபெறும் விபத்துகளை குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திட வேண்டும் மேலும் போக்குவரத்து காவலர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்திட வேண்டும்.
மேலும் நீண்ட கால திட்டங்களான மேம்பாலங்கள் சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்திட ஒன்றிய மற்றும் மாநில அரசுகளிடம் நிதி ஒதுக்கீட்டைப் பெறமேற்கண்ட அறிக்கையினை தங்கள் நாளிதழில்களில் வெளியீட்டு உதவிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
மேற்கண்ட அறிக்கையினை தங்கள் நாளிதழில்களில் வெளியீட்டு உதவிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments