Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி மேற்கு தொகுதி திமுக தேர்தல் பணிமனை அலுவலகம் திறப்பு – அமைச்சர் நேரு திறந்து வைத்தார்.

 

திருச்சி மேற்கு தொகுதி திமுக தேர்தல் பணிமனை அலுவலகம் திறப்பு – அமைச்சர் நேரு திறந்து வைத்தார்.நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், திமுக வேட்பாளராக அமைச்சர் கே.என்.நேரு போட்டியிடுகிறார். இந்நிலையில் மேற்கு தொகுதிக்கான தேர்தல் பணிமனை அலுவலகம் திறப்பு விழா, தில்லை நகர் பகுதியில் இன்று நடைபெற்றது.

இதில் அமைச்சரும் வேட்பாளருமான கே.என்.நேரு கலந்துகொண்டு, புதிய பணிமனை அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, ஶ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளர் துரைராஜ், துறையூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் லெனின் பிரசாத் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *