திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 29.08.2020-ம் தேதி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பார்க்கும்போது அவரது 13 வயது மகளை காணவில்லை என்றும், அருகில் உள்ள வீடுகளில் தேடிப்பார்த்துக்கொண்டிருந்த போது அச்சிறுமி எதிரியான ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சதிஷ் 26/20, த.பெ.சக்திவேல் என்பவருடன் வீட்டிற்கு வந்துள்ளார்.

பின்னர், அன்று இரவு சிறுமி வயிற்று வலியால் பாதிக்கப்பட்டதாகவும், இது குறித்து, அச்சிறுமியின் தாயார் கேட்டப்போது சிறுமியை மேற்படி எதிரியான சதிஷ் என்பவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், மேலும், இந்த விசயம் குறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியதாக கூறியுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் மேற்படி எதிரி நடவடிக்கை எடுக்க வேண்டி கொடுத்த புகாருக்கு ஜீயபுரம் மகளிர் காவல் நிலையத்தில் குற்ற எண். 32/20, U/s 366, 506(i) IPC r/w 5(M) and 6 of POCSO Act r/w 506(1) IPC -ன் படி 02.09.2020 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

இவ்வழக்கின் விசாரணை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக செல்வி. சுமதி, ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் இன்று (10.02.2026) திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி திருமதி.சண்முகபிரியா, அவர்கள் எதிரி சதிஷ் 26/20, த.பெ.சக்திவேல் என்பவருக்கு 20 வருட சிறைத் தண்டனையும், ரூபாய் 13,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இந்நிலையில், இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்ற நடவடிக்கைகளை சரிவர கவனித்த ஜீயபுரம் காவல் நிலைய நீதிமன்ற காவலர் திருமதி.நித்யா என்பவரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப அவர்கள் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments