திருச்சிராப்பள்ளி மாவட்டம், கொடியாலம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 2021 ஆம் ஆண்டு தனது வீட்டில் தனியாக இருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் 26/22, த.பெ.சண்முகம், காந்தி நகர், கொடியாலம், திருச்சி மாவட்டம் என்பவர் மேற்படி சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்து சிறுமியை பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தியதாக பாதிக்கப்பட்ட

சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் ஜீயபுரம் 6/22, u/s 450 IPC and 5(1), 5(j)(ii) r/w 6(i) of POCSO Act ன் படி 24.07.2022 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு, 25.08.2022 அன்று எதிரி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக செல்வி. சுமதி, ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் இன்று (23.03.2026) திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி திருமதி.சண்முகபிரியா, அவர்கள் எதிரி தமிழரசன் 26/22, த.பெ. சண்முகம், காந்தி நகர், கொடியாலம், திருச்சி மாவட்டம் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய். 20,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்ற நடவடிக்கைகளை சரிவர கவனித்த ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய நீதிமன்ற காவலர் திருமதி.நித்யா, என்பவரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப அவர்கள் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments