Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trichy's heroes

தேசிய அளவில் நடைபெற்ற நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற திருச்சி இளைஞர்!!

No image available

விளையாட்டுகள் என்பது நம் வாழ்வோடு ஒன்றிணைந்த ஒன்று. தடகளமோ, குழு விளையாட்டோ ஏதாவது ஒன்றில் நாம் அனைவருமே சிறந்து விளங்க கூடியவர்கள் தான். விளையாட்டு ஒன்றை மட்டுமே நம்பி சர்வதேச அளவில் இந்தியாவிற்காக விளையாடப் போகும் இளைஞரின் கதை இது !!

Advertisement

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியை சேர்ந்தவர் ஷாகுல் ஹமீது(21). சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான ஊரக போட்டியில் கலந்துகொண்டு நீளம் தாண்டுதல் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளார். 29 வயதுக்குட்பட்டவர்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்டு நீளம் தாண்டுதல் போட்டியில் முதல் பரிசு பெற்று அடுத்து சர்வதேச அளவிற்கு தேர்வாகியுள்ளார். 

சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர் விடாமுயற்சி ஒன்றை மட்டும் கையில் வைத்துக்கொண்டு லால்குடி அருகே உள்ள அரசு கல்லூரியில் படித்து அவருடைய தாய் சமீம் அரவணைப்பில் இன்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

இதுகுறித்து ஷாகுல் ஹமீதை தொடர்பு கொண்டு பேசினோம்…. “அப்பா சின்ன வயசிலேயே இறந்திட்டாங்க. அம்மாதான் ஃபுல் சப்போர்ட் பண்ணி என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்தாங்க. அரசு கல்லூரியில் படிக்கும்போதே லால்குடி ஸ்போர்ட்ஸ் கிளப்பில் சேர்ந்து தினமும் பயிற்சி பெற்று வந்தேன். என்னுடைய பயிற்சியாளர் ராமச்சந்திரன் தான் இதற்கு காரணம். தினமும் என்னை ஊக்கப்படுத்தி இவ்வளவு தூரம் நான் சென்றதற்கு அவர் தான் காரணம். அடுத்து சர்வதேச அளவில் நீளம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொள்ள உள்ளேன். இதற்காக 40 ஆயிரம் ரூபாய் கேட்டு உள்ளனர். எனக்கு லால்குடி பள்ளிவாசல் சார்பாக மிகப்பெரிய உதவியினை செய்துள்ளனர். இன்னும் சிலர் உதவி செய்வதாகவும் கூறி உள்ளனர். ஆனால் சர்வதேச அளவில் செல்வதற்கு பணம் பற்றாக்குறையாக தான் உள்ளது. கண்டிப்பாக சர்வதேச நீளம் தாண்டுதல் போட்டியில் வெற்றி பெற்று ஒலிம்பிக்கில் விளையாடுவதை என்னுடைய கனவு என்றார்.

Advertisement

குடும்பத்தின் நிலைமை ஒருபுறம் இருந்தாலும் விடா முயற்சி ஒன்றை மட்டுமே விடாது பிடித்துச் செல்லும் இதுபோல் இளைஞர்கள் கண்டிப்பாக ஒருநாள் உச்சத்தை அடைவார்கள் என்பதே நிதர்சனம். திருச்சி விஷன் இணையதளம் சார்பாக ஷாகுல் ஹமீதுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்‌‌.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *