அமமுக கூட்டணி சேரும் கட்சியே தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்” –
முசிறியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் டிடிவி தினகரன் அதிரடியாகப் பேசியுள்ளார்.
திருச்சி மாவட்டம், முசிறியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

தலைமை நிலைய செயலாளர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது முசிறி சட்டமன்றத் தொகுதியில் அமமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ ராஜசேகரன் போட்டியிடுவார்
என டிடிவி தினகரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

நமது கொள்கைக்கு உடன்படும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம் என்றும், அமமுக இடம் பெறும் கூட்டணியே தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
மற்ற கட்சிகளைப் போல 50 இடங்கள், 80 இடங்கள் வேண்டும் என கட்டாயப்படுத்தி நிர்பந்தம் செய்ய மாட்டோம். எதார்த்த சூழலை உணர்ந்து கூட்டணி தர்மத்தின்படி செயல்படுவோம்,
அமமுக-வின் வளர்ச்சி: 50, 75 ஆண்டுகளைக் கடந்த கட்சிகளை விட, வெறும் 8 ஆண்டுகளில் அமமுக பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. 200 தொகுதிகளில் கட்சி வலிமையாக உள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வரும் ஆட்சியில் நிச்சயம் பங்கு பெறும். தகுதியுள்ள வேட்பாளர்களுக்கு கண்டிப்பாக வாய்ப்பு வழங்கப்படும்.
அவர்களின் வெற்றிக்கு நான் முழுமையாகத் துணை நிற்பேன். கூட்டணி தர்மத்தை மதித்து, யாருக்கும் பாதிப்பில்லாமல் எதார்த்தமாகச் செயல்படுவோம் என்று பேசினார்.

தேர்தலுக்கு முன்பே வேட்பாளரை அறிவித்து, கூட்டணி குறித்த தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய டிடிவி தினகரனின் இந்தப் பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments