Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் பூட்டி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருடும் இரண்டு நபர் – சிசிடிவி காட்சி

திருச்சி சமஸ்பிரான் தெருவை சேர்ந்தவர் சௌமியா நராயணன். இவரது கடை சின்ன செட்டி தெருவில் உள்ளது. தனது இரு சக்கர வாகனம் ( TVS XL 100 ப்ளு கலர்) வண்டியை கடையின் எதிர்புறம் வண்டியை பூட்டி 14.8.2022 அன்று வைத்து விட்டு வீட்டிற்கு வந்தார். வீட்டிலிருந்து அன்றிரவு வெளியூர் பணி காரணமாக. சென்று விட்டார்.  பின்னர் ( 16-8 2022 )ம் தேதி 5.30 மணிக்கு நேரடியாக கடைக்கு வந்து வண்டியை எடுக்க வந்த போது இருசக்கர வாகனத்தை காணாமல் தேடி உள்ளார். அக்கம் பக்கத்தில் விசாரித்தும், இரண்டுசக்கர வாகன ஸ்டாண்டிலும் சென்று பார்த்தும் கிடைக்காத நிலையில் அப்பகுதியில் வைத்திருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்தார்.

அப்போது 15-8.2022 இரவு 2.40 மணியளவில் இருவர்  தன்னுடைய இரு சக்கர வாகனத்தை திருடி செல்வது காட்சியில் இடம்பெற்று இருந்தது. உடனடியாக கோட்டை காவல்நிலைய ஆய்வாளரிடம் சிசிடிவி காட்சிகளுடன் தனது இருசக்கர  வாகனத்தை கண்டுபிடித்து தர கூறி புகார் அளித்துள்ளார். கோட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் இருசக்கர வாகனத்தை திருடி இரண்டு நபர்களை தேடி வருகின்றனர்.

பூட்டி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை இரண்டு நபர்கள் வந்து திருடி செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி இருந்தும் இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என காவல்துறை வட்டாரங்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய….. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *