திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரித்து குழு கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது எம்பி கனிமொழி அவர்கள் தலைமையில் அமைச்சர்கள் நேரு கோவை செழியன் டி.ஆர்.பி,ராஜா, மகேஸ் சிவசங்கர், இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருச்சி பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை நான்கு மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற தொகுதிகள் உட்பட்ட மக்களின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு சம்பந்தமாக கருத்து கேட்டு கூட்டம் நடத்தப்பட்டது. முதலில் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தொழிற் துறை தொடர்பாக எங்கள் மாவட்டத்திற்கு எதையும் செய்யவில்லை என பேசினார் டிஆர்பி ராஜா சிரித்துக்கொண்டே உன்னை தொகுதி செய்துள்ளேன் என குறிப்பிட்ட ஆனாலும் அமைச்சர் நேரு விடாமல் நீ ஒன்றும் செய்யவில்லை என மீண்டும் பேசினார் அதன் பிறகு பேசிய எம் பி கனிமொழி தேர்தல் அறிக்கை எப்பொழுதும் கதாநாயகனாக இருக்கும் அதனையே இந்த சட்டமன்றத் தேர்தலின் முன்னிறுத்தி தேர்தல் அறிக்கை தயாரித்து வருகிறோம்.
உங்களுடைய கோரிக்கைகளை தெரிவியுங்கள் என்று பேசிய போது குறிப்பிட்ட அமைச்சர் எங்கள் மாவட்டத்திற்கு மகளிர் மாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்து வெற்றி கரமாக நடத்தி தந்த அமைச்சர் நேரு அவர்களுக்கு பாராட்டை தெரிவித்து பேச்சை துவக்கிய எம்பி கனிமொழி தேர்தல் அறிக்கை தொடர்பான கூட்டத்திற்கு திருச்சிக்கு வர வேண்டுமென அமைச்சர் நேரு கேட்டுக்கொண்டார்.
திருச்சி பிரதானமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அவர் இருக்கும் இடம் எப்போதும் பிரதானமாக இருக்கும்.அமைச்சர் நேரு இடையில் குறுக்கிட்டு எழுந்து நின்று அழுத பிள்ளை தான் பால் குடிக்கும் என்று சொல்வார்கள். நீங்க எங்களுக்கு வேளாண் பல்கலைக்கழகம் வேண்டும் திருச்சியில் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் சித்த மருத்துவ கல்லூரி வேண்டும் ஏற்கனவே முதல்வரிடம் குடமுருட்டி அருகே தடுப்பணையுடன் கூடிய பாலம் வேண்டும் என கேட்டு இருந்தோம் அதனை திருச்சி சமயபுரம், திருவெறும்பூர் சுற்றி அல்லித்துறை வரை சென்று பெரிய வட்டமாக சுற்றுச்சாலை அமைத்தால் போக்குவரத்துக்கு இடைவிடாமல் இருக்கும்
அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் அரசு கலைக் கல்லூரி இருக்கிறது திருச்சி கிழக்கு தொகுதியில் மட்டும் கலைக் கல்லூரி வேண்டும் இதெல்லாம் தேர்தல் அறிக்கையில் கொண்டு வந்தால் கொண்டு வந்தார் போன முறை ஏமாந்து விட்டேன் வரவில்லை அதனால் இந்த முறை முன்கூட்டியே வந்து விட்டேன் நீங்கள் செய்து தர வேண்டும் என மூன்று முறை கூறினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டது போல மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற வைக்க அனைத்து முயற்சிகளையும் அமைச்சர் கூறியது போல் அந்த திட்டங்களை இணைத்து மேற்கொள்வோம் என்றார்.
நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் இணைந்து திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிடம் திருச்சியை இரண்டாவது தலைநகராக அறிவிக்க நடவடிக்கை எடுப்பதை தேர்தல் அறிக்கையில் இடம் பெற செய்ய வேண்டும் என மனு அளித்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments