Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

துறையூர் அருகே அமமுக ஒன்றிய செயலாளரை கம்பியால் தாக்கிய திமுக முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் உட்பட இருவர் கைது..

உப்பிலியபுரம் போலீசார் கைது செய்த நிலையில் மற்றும் ஒருவரை தேடி வருகின்றனர்…

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுநாவலூர் ஊராட்சி ரெட்டியார் தெருவை சேர்ந்தவர் யோகநாத்
(அம்மா மக்கள் முன்னேற்ற கழக உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர்) வயது 31.
அதே ஊரைச் சேர்ந்த அவரது உறவினர் மகன் வினோத்
ஆகியோர் கடந்த மாதம் சிறுநாவலூர் ஏரியில் மீன் பிடிப்பதற்கான ஏலத்தை ரூபாய் 2 லட்சம் தொகைக்கு எடுத்ததாக கூறப்படுகிறது,

யோகநாத் மற்றும் வினோத் இருவரும் வாத்தலை பகுதியில் இருந்து மீன்பிடி தொழிலாளர்களை வேனில் அழைத்து சென்று இரவு நேரத்தில் சிறு நாவலூர் ஏரிப் பகுதியில் மீன் பிடிக்க முயன்றதாக கூறுகின்றனர், அப்பொழுது அங்கு வந்த சிறு நாவலூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன் வயது 40 அவரது நண்பர்கள் ஜெயராமன் வயது 32, ரகு வயது 34 ஆகியோர் மீன் பிடிக்கும் முயன்றவர்களை தடுத்து நிறுத்தியதாகவும், அழைத்து வந்த வேனை சேதப்படுத்தியும், அதை கேட்ட யோகநாத் மற்றும் அவரது தந்தை மணிவேல் ஆகியோரை இரும்பு கம்பியால் தாக்கியதால் யோக நாட்டிற்கு தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் அக்கம் பக்கத்தில் உள்ளோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக இருவரையும் துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

யோகநாத் அளித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து சிறுநாவலூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன், அவரது நண்பர்கள் ஜெயராமன் ரகு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியன் மற்றும் ஜெயராமனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்கள்,

ரகுவை போலீசார் தேடி வருகின்றனர், திமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுப்பிரமணியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கு வந்து தகராறு செய்தது அவர்கள் பயன்படுத்திய வலை மற்றும் மீன் வாகனங்களை அடித்து நொறுக்கியதாக தெரிகிறது அவர் அடித்து நொறுக்கும் காட்சியானது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது குறிப்பிடத்தக்கது..

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *