திருச்சி மாவட்டம் தொட்டியம், தோளூர்பட்டியில் இயங்கி வரும் கொங்குநாடு கல்வி நிறுவனங்களில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நேற்று (19.02.2026) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் உலகெங்கும் நிறுவப்பட்டு வரும் திருவள்ளுவர் சிலைகளின் வரிசையில், இங்கு திறக்கப்பட்டுள்ள சிலை 193-வது திருவள்ளுவர் சிலையாகும். இந்தச் சிலையினை விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி. சந்தோசம் அவர்கள் நேரில் கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வாக, நாணயக் கண்காட்சி மற்றும் சிறப்பு நாணயத் தொகுப்பு வெளியீடு அமைந்திருந்தது. உலகெங்கிலும் உள்ள 7 கண்டங்களைச் சேர்ந்த நாணயங்கள் இதில் இடம்பெற்றிருந்தன. திருக்குறளின் 1330 குறள்களைச் சிறப்பிக்கும் விதமாக, ரூ. 1,33,000/- மதிப்புமிக்க 1330 நாணயங்கள் அடங்கிய உலக வரைபட நாணயத் தொகுப்பு பார்வைக்கு வைக்கப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மேலும் வாழை இலையிலேயே 1330 திருக்குறள்களையும் எழுதி காண்போரை வியப்பில் ஆழ்த்தினர்

முன்னிலை வகித்தவர்கள்:
இவ்விழாவிற்கு கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் நிர்வாகக் குழுவினர் முன்னிலை வகித்தனர்.செயலாளர்: Er. கொங்கன். K. தங்கவேலு அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்,பொருளாளர்: Dr. PST. V.S. தென்னரசு அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்,தலைவர்: Dr. PSK. R. பெரியசாமி அவர்கள் தலைமை உரை ஆற்றினார்.
விழாவில் முதல்வர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments