நாளை (06.05.2024) ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டத்தில் நம்பெருமாள் ஆண்டாள் சூடிக்கொடுத்த கிளி மாலை மற்றும் வஸ்திரம் மரியாதை அணிந்து காட்சி அளிப்பார். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலிருந்து ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவின்போது ஸ்ரீரங்கம் நம்பருமாளுக்கு வஸ்திர மரியாதை செய்யும் வைபவம் நடத்தப்பட்டு வருவது வழக்கம்.
 இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் நம் பெருமாள் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலிருந்து ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமிக்கும், உற்சவர் நம்பருமாளுக்கும் பட்டு வஸ்திரங்கள் மற்றும் அரங்கநாயகி தாயாருக்கும், நாச்சியார்களுக்கும் பட்டு புடவைகள், ஆண்டாள் சூடிக்கொடுத்த கிளிமாலை மற்றும் மங்களப் பொருட்கள் கொண்டு வந்திருந்தனர். இதனை ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் செயல் அலுவலர் லட்சுமணன் தலைமையில் பட்டாச்சாரியார்கள், நிர்வாகிகள் எடுத்து வந்து, ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் மாரியப்பன் முன்னிலையில் கோவில் பட்டாச்சாரியார்களிடம் ஒப்படைத்தனர்.

 முன்னதாக நம்பெருமாளுக்கான வஸ்திரங்கள், பழங்கள் மற்றும் பூக்கள் யாவும் கருட மண்டபத்தில் இருந்து திருக்கோயில் பிரகாரங்களில் வலம்வந்து பின்னர் மூலஸ்தானம் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் சித்திரை திருவிழாவில் 9 ஆம் நாளான, நாளை நடைபெறும் திருத்தேரோட்டத்தின்போது ஆண்டாள் சூடிக்கொடுத்த கிளி மாலை மற்றும் வஸ்திரங்களை அணிந்து நம்பெருமாளும் தாயாரும் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

 31 Oct, 2025
31 Oct, 2025                           37
37                           
 
 05 May, 2024
 05 May, 2024

Comments