2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் C. ஜோசப் விஜய், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தனது விருப்ப மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
தனது விருப்ப மனுவில் திருச்சி கிழக்கு தொகுதியைத் தேர்ந்தெடுத்ததற்கான முக்கியக் காரணங்களை விஜய் பட்டியலிட்டுள்ளார்: மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயில், நத்தர்ஷா பள்ளிவாசல் மற்றும் ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ள இந்தத் தொகுதி மத ஒற்றுமையின் புனிதத் தலமாகத் திகழ்கிறது.
தமிழகத்தின் மையப்பகுதியாகவும், வளர்ந்து வரும் மெட்ரோ நகரமாகவும் திருச்சி உள்ளது.
கடந்த 30 ஆண்டுகளாக மக்கள் இயக்கம் மூலம் செய்த பணிகள்
இத்தொகுதி மக்களிடையே நீங்கா இடம் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வெற்றி பெற்றால் செய்யப்போகும் திட்டங்கள் சில முக்கிய வாக்குறுதிகளை முன்வைத்துள்ளார்:
வீரமங்கை வேலுநாச்சியார் பெயரில் தொகுதி முழுவதும் தற்காப்புக் கலைக்கூடங்கள் அமைக்கப்படும்.
ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட உய்யகொண்டான் கால்வாய் சீரமைக்கப்படும்.
அரியமங்கலம் குப்பை கிடங்கு நகருக்கு வெளியே மாற்றப்படும் மற்றும் திருச்சி – தஞ்சாவூர் பைபாஸில் சர்வீஸ் சாலைகள் அமைக்கப்படும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வச் சின்னமான ‘விசில்’ சின்னத்துடன் விஜய் களம் இறங்குவது அவரது தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments