Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி கிழக்கிலும் விஜய் -நேரடியாக வேட்பு மனு தாக்கல் செய்ய திட்டம்

திருச்சி கிழக்குத் தொகுதியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் போட்டியிடுகிறார் என முன்பு தகவல் தெரிவிக்கப்பட்டு பின்பு போட்டியிடுகிறா இல்லையா என்று சந்தேகம் தொடர்ந்து சந்தேகம் வந்தது. தமிழக வெற்றி கழகம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை துவங்கிய பொழுது முதன்முறையாக திருச்சி திருப்புமுனை ஏற்படுத்தும் என அரசியல் கட்சிகள்

தெரிவிக்கும் நிலையில் தமிழக வெற்றி கழகத்திற்கும் அது திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று நிர்வாகிகள் தெரிவித்து முதல் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட மரக்கடையில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசி ஆரம்பித்தார். தற்பொழுது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் உறுதியாக போட்டியிடுகிறார் என்று தகவல் வெளியாகிவிட்டது. நாளை தமிழக வெற்றிக்கழகத்தின் 234 வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட உள்ளது. மதுரையில் அவர் சொன்னது போல் பெரம்பூரில் விஜய் திருச்சி கிழக்கில் விஜய் என்று அறிவிப்பு வெளியாக உள்ளது. இதற்காக அவர் நேரடியாக

வந்து திருச்சி கிழக்கிலும் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். முன்னதாக பெரம்பூரில் 30ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்து தனது பரப்புரையை துவங்குகிறார். திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடும் பொழுது 9 சட்டமன்றத் தொகுதிகள் மட்டும்மல்லாமல் மத்திய மண்டலத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கும் என தவெக நிர்வாகிகள் நம்பிக்கையுடன் கூறி களத்தில் ஓயாமல் பணியாற்றி வருவதாக தெரிவித்தார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *