மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் ஆறாம் தேதி முதல் 21ஆம் தேதி வரை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரம் செய்ய உள்ளார்திமுக வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான செயல்வீரர் கூட்டத்தில் பங்கேற்று பல்வேறு கருத்துக்களை தெரிவித்தேன்.
திருச்சி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட கந்தர்வக் கோட்டை புதுக்கோட்டை தொகுதிகளிலும், திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை செய்ய உள்ளேன்
காட்டுமன்னார்கோவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் போட்டியிடுகிறார் அங்கு போட்டியிடுவது தொடர்பான விவகாரத்தை தீர்மானிக்க வேண்டியது கட்சி தலைவரான அவரும் கட்சி நிர்வாகிகளும் தான் அரசியல் கட்சித் தலைவர்கள் கூறும் கருத்துக்களை சூழ்நிலைக்கு ஏற்ப பல அர்த்தங்களை எடுத்து ஊடகங்கள் வேறுமாதிரி வெளியீட்டு குழப்பத்தை ஏற்படுத்துகின்றன
தமிழகத்தை பொறுத்தவரை மதவாத சக்திகள் வளர்ச்சி, நெருக்கடியான சூழ்நிலை, மூன்றாவது சத்தியாக நடிகர் விஜய் வந்திருப்பது போன்ற காரணங்களால் அரசியல் நகர்வு எப்படி போகும் என்று சொல்ல முடியாது எனவே தமிழகத்தின் நலன் கருதி ஒடுக்கப்பட்ட மக்களுக்காக திருமாவளவன் சட்டசபையில் இடம் பெற வேண்டும் என்ற நினைக்கிறார் அது தவறு இல்லை. தமிழக சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக விஜப் மிகப் பெரிய நட்சத்திரம் ஆக ஜொலிக்கிறார் அவர் பின்னால் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவருக்காக வரும் கூட்டம் ஓட்டுக்களாக மாறுமா
என்பது தேர்தல் முடிவு வரும் போது தெரியும் அவருடைய செயல்பாடு பத்திரிக்கையாளர் சந்திப்பு போன்ற வற்றில்நீங்கள் கேட்கும் கேள்விக்கு அவர் பதில் சொல்லும் போது அதிலேயே விடை தெரியும் அப்படி செயல்பட்டால் தான் சிறப்பான செயல்பாடாக இருக்கும் இப்போது அவரைப் பார்க்க வரும் கூட்டம் ஓட்டுக்களாக மாறுமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்எம்ஜிஆர் கட்சியில் வாங்குவதற்கு முன் திமுகவில் பல ஆண்டுகள் நிர்வாகியாக இருந்துள்ளார் அதன் பிறகு தான் நேரடி அரசியலுக்கு வந்து தனி இயக்கம் துவக்கினார். சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வந்த பலர் தோல்வியடையுள்ளனர்.முதலில் அவரை சந்திப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும் திருச்சியில் பத்திரிக்கையாளர்கள் கூட அவரை சந்திக்க முடியாத நிலையை ஏற்படுத்தினர் என்பதை கட்சியினர் சிந்தித்துப் பார்க்க வேண்டும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் சமூக நீதியை வலுப்படுத்துவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தொழில் வளர்ச்சிக்காக 30 லட்சம் வேலை வாய்ப்புகள உருவாக்கும் வகையில் 12 லட்சத்து 37 ஆயிரம் கோடி ரூபாய்க்கான 1127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளன இதில் 73 சதவீதம் புரிந்துணர்வு ஒபந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன என்பதற்தான தரவும் வெளியிடப் பட்டு உள்ளன.
கடந்த ஆண்டு 11% க்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது இயற்கை பேரிடர் மத்திய அரசு நிதி ஒதுக்காத பொருளாதார நெருக்கடி போன்ற சூழலிலும்
சமூக நீதி வேலைவாய்ப்பு பொருளாதார வளர்ச்சி போன்றவற்றுக்கான செயல் திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. திமுகவின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 101 வாக்குறுதிகளில் 60க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் தமிழகத்தில் நிலவும் சூழ்நிலை காரணமாக செயல்படுத்த முடியாத நிலை உள்ளது 30க்கும் அதிகமான வாக்குறுதகள் அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது அதனால் வரும் தேர்தலில் மதசார்பற்ற கூட்டணிக்கு மக்கள் ஓட்டு அளிப்பார்கள் தொங்கு சட்டசபை வர வாய்ப்பு இல்லை நடிகர் விஜயின் வருகை பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும் வரும் தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளை அதிமுக இரண்டாவது இடத்திலும் சில தொகுதிகளில் விஜய் கட்சி த வெ.க. இரண்டாவது இடத்திலும் வர வாய்ப்பு உள்ளது. அரசியலில் இருப்பது பலருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் அதை நானே உணர்ந்து இருக்கிறேன். இன்றைய சூழலில் அரசியலில் மிகவும் நிதானம் தேவை நிதானத்தை இழந்துவிட்டால்இயக்கத்துக்கு பாதிப்பை உருவாக்கலாம் என்ற முறையில் ஆ ராசா கூற்று இருக்கலாம் என்று எம்பி துரை வைகோ தெரிவித்தார்.



Comments