Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

2026 தேர்தலில் விசிக தவிர்க்க முடியாத சக்தியாக திகழும்- திருச்சியில் திருமா பேட்டி

*பிற மொழிகளில் தாய்மொழியாக கொண்ட மாநிலங்களிலும் ஹிந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது – திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன் பேட்டி

விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும், சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அரியலூர் மாவட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பங்கு பெற்று பின்னர் சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.அப்பொழுது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

தமிழக ஆளுநர் எக்ஸ் வலைத்தளத்தில் தமிழகத்தில் முன்மொழி தேவை. இளைஞர்களை எதிர்காலத்தில் தடுக்கின்றனர் என குற்றச்சாட்டு உள்ளார் என்ற கேள்விக்குஆர் எஸ் எஸ் அஜண்டாவை நடைமுறைப்படுத்தவே நியமிக்கப்பட்டுள்ளவர் தமிழக ஆளுநர் ரவி.இந்தியாவில் பழமொழிகள் பேசுகின்ற தேசிய இனங்கள் வாழ்கின்றோம். அதிலே ஒன்று ஹிந்தி.தமிழை தாய் மொழியாக கொண்டவர்களை கட்டாய் ஹிந்தி கற்க வேண்டும் என்று சொல்லுவது அவர்கள் ஆதிக்க போக்கை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது இது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.

தமிழ்நாட்டில மட்டும் அல்ல இந்தி அல்லாத பிற மொழியை தாய்மொழியாக கொண்ட பிற மாநிலத்திலும் ஹிந்தி திணிக்க கூடாது என்பதுதான் விடுதலை சிறுத்தை நிலைப்பாடு.ஆர்.என். ரவி ஒரே தேசம், ஒரே மொழி, என்கிற ஆர் எஸ் அர்ஜெண்டாவை நடைமுறைப்படுத்துவதற்காக இப்படி தொடர்ந்து பேசி வருகிறார்.தமிழ்நாட்டு மக்களை எதிர்காலத்தில் இந்தி பேசும் மக்களாக மாற்றுவது, ஒரே தேசம், ஒரே மொழி உருவாக்குவது இந்திக்குப் பிறகு சமஸ்கிருதமே இந்தியாவில் ஒற்றை மொழி என மாற்றுவது என்ன செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.தமிழ்நாட்டு மக்கள் மிகவும் விழிப்புணர்வு உள்ளவர்கள் ஆர் எம் ரவி போன்ற மாயமாலா பேச்சுக்கு இணங்க மாட்டார்கள் என கூறினார்.2026 இல் 25 இடங்களில் போட்டியிடுவது தொண்டர்களின் என்னமா இருக்கிறது என்று வன்னி அரசு கூறியுள்ளார் உள்ளார் என்ற கேள்விக்குதேர்தல் நேரத்தில் முடிவெடுப்போம்விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் பணியை தீவிரமாக செயல்படுத்த வேண்டும், நடைமுறைப்படுத்த வேண்டும், களமிறங்கி பணியாற்ற வேண்டும் என ஊக்கப்படுத்தி வருகிறோம். அந்த வகையில் இயக்க தோழர்களை இயக்குவது, அணி திரட்டுவது என்னும் பொருளில் விடுதலை சிறுத்தைகள் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளோம்.

எனவே விடுதலை சிறுத்தைகள் இல்லாமல் அரசியல் காய் நடத்த முடியாது என்ற நம்பிக்கை ஊட்டுகிறோம் என தெரிவித்தார்.தொடர்ந்து திருமாவளவனை விலை கொடுத்து வாங்க முடியாது என்று கூறியுள்ளார் யார் உங்களை விலை கொடுத்து வாங்க முயற்சித்தார் என்று கேள்விக்குபதில் ஏதும் கூறாமல் கடந்து சென்றார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision VZ A, 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *