Wednesday, September 17, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Business

மாதா மாதம் நிலையான வருமானம் வேண்டுமா ?

குறைந்த முதலீட்டில் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான மாதாந்திர வருமானத்தைப்பெற ஒரு சிறந்த திட்டம் உள்ளது. மத்திய அரசின் ஆதரவுடன் உங்கள் பணம் இதில் உறுதி செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் ரூபாய் 3 ஆயிரம் நிச்சயமாகப்பெற இதனைச்செய்தால் போதுமானது.

அட்டகாசமான திட்டங்க உங்களுக்காக உள்ளது. தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் போன்றது . இந்தத் திட்டத்தில் சேருவதன் மூலம் ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானத்தைப் பெறலாம். மத்திய அரசின் ஆதரவு இருப்பதால் முதலீட்டுக்கு மோசம் இல்லை என அடித்துச்சொல்லலாம். எனவே எந்த பதற்றமும் இல்லாமல் இந்தத் திட்டத்தில் நீங்கள் சேரலாம். ஆனால் முதலீட்டாளர்கள் இந்த திட்டத்தில் ஒரே நேரத்தில் பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

இந்தப்பணத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் வட்டி வடிவில் நிலையான வருமானத்தைப் பெறலாம். முதிர்வு காலத்திற்குப் பிறகு உங்கள் பணம் உங்களுக்குத் திருப்பிச்செலுத்தப்படும். தபால் அலுவலகம் வழங்கும் மாத வருமான திட்டத்தின் கீழ், நீங்கள் ரூபாய் 9 லட்சம் டெபாசிட் செய்யலாம். அதே நேரம் கூட்டுக் கணக்கு தொடங்கினால். ரூபாய் 15 லட்சம் வரை முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளது.

 

நடப்பாண்டு 2023-24 ஆண்டு பட்ஜெட்டின் போது இந்த வரம்பை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முன்பு அதிகபட்சமாக ரூபாய்  9 லட்சம் வரை மட்டுமே முதலீடு செய்ய முடிந்தது. ஆனால் இப்போது இந்த வரம்பு மிக அதிகம் என்று சொல்லலாம். ஆம், தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் 5 ஆண்டுகள் முதிர்வு காலத்தைக் கொண்டுள்ளது. தற்போது வட்டி விகிதம் 7.4 சதவிகிதமாக இருக்கிறது. இந்த வட்டி விகிதம் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் மாறும். அல்லது சரி செய்யப்படலாம். உதாரணமாக, இந்த அஞ்சல் அலுவலக மாத வருமானத் திட்டத்தில் நீங்கள் ரூபாய்  15 லட்சம் முதலீடு செய்தால்.. ஒவ்வொரு மாதமும் ரூபாய்  9,250 கிடைக்கும்.

இதை நீங்கள் ஐந்து ஆண்டுகளுக்குப் பெறலாம். பின்னர் உங்களின் அசல் அதாவது நீங்கள் டெபாஸிட் செய்த தொகை உங்களுக்கு திருப்பித் தரப்படும். ஒரு சிறிய தொகை என்றால் நீங்கள் ரூபாய் 5 லட்சம் முதலீடு செய்தால் கூட மாதம் ரூபாய் 3 ஆயிரம் வரை வட்டி கிடைக்கும். அதாவது நீங்கள் முதலீடு செய்யும் தொகையைப் பொறுத்து உங்களது வருமானம் மாறுபடும். அதனால்தான் அதிக தொகையை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம். மூத்த குடிமக்கள் மற்றும் வழக்கமான வருமானம் விரும்புபவர்களுக்கு இத்திட்டம் ஏற்றது என்றே கூறலாம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *