சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு நகைச்சுவை பதிவில், திருமண அழைப்பிதழ் தொடர்பான புதுப்பிப்பு என்ற தலைப்பில் விருந்தினர்களுக்கு வித்தியாசமான தகவல் பகிரப்பட்டுள்ளது.
அதில், தொடர்ந்து நடைபெற்று வரும் போர் காரணமாக திருமண நிகழ்ச்சியில் மாற்றமில்லை என்றும், அனைவரும் சரியான நேரத்திற்கு வருமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கேஸ் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக உணவு ஏற்பாடுகள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், மற்ற நிகழ்ச்சிகள் வழக்கம்போல் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பரிசுகள் வரவேற்கப்படுகின்றன என்றும், குடும்பத்தினருடன் வந்து மணமக்களை ஆசீர்வதிக்குமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலாக, விருந்தினரின் பதிலும் நகைச்சுவையாக அமைந்துள்ளது. அதில், தங்களுடைய கார் கேஸில் இயங்குவதால், கேஸ் இல்லாமல் வர முடியாது என்றும், திருமண நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்துமாறும், மணமக்களுக்கு தங்களது ஆசீர்வாதங்களை தெரிவித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் நகைச்சுவை உள்ளடக்கமாக பகிரப்பட்டு வருகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments