யார் இவர்? துப்பாக்கியுடன் புல்லட்டில் வலம் வருபவர் - போலீஸ்க்கு சவால்

யார் இவர்? துப்பாக்கியுடன் புல்லட்டில் வலம் வருபவர் - போலீஸ்க்கு சவால்

சமூக வலைதளங்களுக்கு இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் அடிமையாகி உள்ள நிலையில், இதில் பதிவிடும் காட்சிகள் மிகவும் அருவருக்கத்தக்க வகையிலும், அபாயகரமாகவும் உள்ளது. குறிப்பாக திருச்சியில் உள்ள இளைஞர்கள் சமூக வலைதளங்களில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். சமுதாய சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் இளைஞர்களை கண்டறிந்து காவல்துறையினர் தக்க பாடம் புகட்டி வருகின்றனர்.

இருப்பினும் சினிமாவையே மிஞ்சும் அளவிற்கு தன்னை ஹீரோவாக காட்டிக்கொள்ள பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தி எடுக்கப்பட்ட காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இதுமட்டுமின்றி தனக்கு பின் பெரிய கூட்டம் இருப்பது போன்று மாயை உருவாக்கி இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து லைக்குகளை அள்ளுவதில் சில இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த வரிசையில் தற்பொழுது திருச்சி பகுதிகளில் இளைஞர் ஒருவர் வீச்சருவாள் ஒன்றை வைத்து போஸ் கொடுத்தும், ஆயுதத்தை எடுப்பது போன்றும், அதைவிட புல்லட் ஓட்டி செல்லும் பொழுது கை துப்பாக்கியை எடுப்பது போன்று காட்சிகள் பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இதுமட்டுமில்லாமல், தன்னை ஒரு கூட்டத்திற்கு தலைவன் போல் காட்டி கொள்ள இளைஞர்களை ஒன்று சேர்த்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். தன்னை தான் போல காட்டிக் கொள்ள தொடர்ந்து இது போன்ற விளம்பர காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர் யார் என்று தெரியவில்லை. 

இது போன்ற காட்சிகளை பார்க்கும் குழந்தைகள், பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரது மனதில் வன்முறையை தூண்டும் எண்ணம் உருவாகும். இதுபோல நாமும் செய்யலாம் என்ற நிலை உருவாகிடும். ஆகவே இதற்கு திருச்சி மாநகர் மற்றும் மாவட்ட காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து இதுபோன்று வன்முறையை தூண்டும் காட்சிகளை பதிவிடுபவர்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

ஏற்கனவே பட்டா கத்தியை வைத்து கேக் வெட்டுவது, மிரட்டுவது, போஸ் கொடுப்பது போன்ற வீடியோகளை பதிவிட்ட நிலையில், தற்பொழுது (ஒரிஜினல் துப்பாக்கியா அல்லது டம்மியா) என்பது மறுபுறம். ஆனால் துப்பாக்கியை எடுத்து காண்பிப்பது போல் காட்சிகள் பதிவிடும் நிலைக்கு இளைஞர்கள் தயாராகி விட்டனர் என்பது மிகவும் ஆபத்தான செய்தியாக உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision