Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

காட்டெருமை தாக்கி பயிர் சேதம்: இறந்த தாய் ஆட்டின் மடியில் குட்டிகள் பால் குடித்த சம்பவம் – விவசாயிகள் வேதனை

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த கரடிப்பட்டி பகுதியில் அதிக அளவில் தற்போது பீர்க்கங்காய் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது பீர்க்கங்காய்கள் காய்த்து பிஞ்சுகள் உள்ள நிலையில் அருகில் உள்ள வேளாண் மலை, காயமலை பகுதிகளில் உள்ள காட்டெருமைகள் இப்பகுதியை சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாயம் செய்துள்ள பயிர்களை முற்றிலும் சேதம் அடையச் செய்கிறது. இந்த நிலையில் நேற்று இரவு கரடிப்பட்டியைச் சேர்ந்த அம்பலம் 85 என்பவரது தோட்டத்திற்குள் புகுந்த காட்டெருமைகள் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் 60 ஆயிரம் செலவில் பயிரிடப்பட்டிருந்த பீர்க்கங்காய் கொடிகளை முற்றிலும் நாசம் செய்தும், தோட்டத்தின் அருகில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆட்டுக்குட்டிகள் மற்றும் ஆடுகளையும் மிதித்ததில் ஒரு ஆடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானது. ஆடு இறந்தது தெரியாமல் குட்டிகள் அதன் மடியில் பால் குடிப்பதை கண்டு அப்பகுதி விவசாயிகள் மனவேதனை அடைந்துள்ளனர். மேலும் பயிர்கள் அதிக அளவில் சேதம் ஆவதால் விவசாயம் செய்தும் எவ்வித பயனும் இல்லை என்றும், இதனால் மேற்கொண்டு விவசாயம் செய்யவும் தயக்கம் அடைவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *