கலைஞா் மகளிா் உரிமைத் திட்டமானது, செப்டம்பா் 15-ஆம் தேதியன்று தொடங்கவுள்ளது. இந்தத் திட்டத்துக்கான விண்ணப்பப் படிவங்கள் நியாய விலைக் கடை பணியாளா்கள் மூலமாக வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டது. முதல் கட்ட முகாம்கள் ஜூலை 24-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை நடந்தது. இதன்பின் ஆகஸ்ட் 18 முதல் 20-ஆம் தேதி வரையில் மூன்று நாள்களுக்கு சிறப்பு முகாம்கள் நடந்தன. அனைத்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கைப்பேசி செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து விண்ணப்பதாரா்கள் அளித்த தகவல்களை அரசு கள ஆய்வு மேற்கொண்டது.
இந்த திட்டத்தை நாளை (15.09.2023) முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் துவங்கி வைக்கிறார். இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சோதனை முயற்சியாக ரூ.1 அவர்களரது வங்கி கணக்கில் அனுப்பி வைக்கப்பட்டது.
திருச்சியில் நாளை (15.09.2023) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விழா மேடையில் 2000 பேருக்கு மகளிர் உரிமைத்தொகை கொடுக்கத் திட்டம் தொடங்கப்பட உள்ளது இதில் அமைச்சர்கள் பங்கேற்று மகளிர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க இருக்கிறார்கள் திருச்சி மாவட்டத்தில் சுமார் 58 ஆயிரம் பேர் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision







Comments