'Wow Robotics Weekend - NEWTON BOX நிறுவனத்தின் இளம் விஞ்ஞானிகளுக்கான தேடல்
இன்றைய காலக்கட்ட குழந்தைகள் புதிது புதிதாக கண்டுபிடிப்பதிலும் உருவாக்குவதிலும் மிகுந்த ஆர்வத்தோடு இருக்கின்றனர். தொழில்நுட்பங்களை கையாள்வதில் ஏற்படும் அதீத ஆர்வம் அவர்களை அறிவியல் மீதான ஆக்க பாதையில் பயணிக்க செய்கின்றது. இதனை ஊகித்த Newtonbox என்ற நிறுவனம் குழந்தைகளின் இந்த ஆர்வத்திற்கு ஒரு வகையில் கைகொடுக்க வேண்டும் என்று புதிய முயற்சி ஒன்றை தொடங்கியுள்ளனர்.
Advertisement
ஏப்ரல் மாதம் 24ம் தேதி அன்று 'wow robotics weekend' என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.
இதுகுறித்து நிறுவனத்தின் இயக்குனர் நரேந்திரன் பகிர்ந்து கொள்கையில்..
குழந்தைகள் எப்பொழுதுமே புதுமையானயற்றை செய்வதில் அதிக ஆர்வம் செலுத்துவர், அதிலும் இக்கால குழந்தைகள் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் அவர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனை மேலும் அதிகப்படுத்தும் வகையில் எங்கள் நிறுவனமானது குழந்தைகளுக்கு ரோபோட்டிக்ஸ் தொடர்பான பிரத்யேக நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
முதலில் சென்னையில் தொடங்கிய எங்கள் பயணம் கத்தார் நாடுகள் வரை சென்றுள்ளது. தற்போது கொரோனா தொற்று அதிகம் இருப்பதால் 200 குழந்தைகளுக்கு ஆன்லைன் வழியாகவே இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம் .
இதில் கலந்து கொள்ளும் குழந்தைகள் தங்களுடைய படைப்புகளை உருவாக்க நாங்கள் உதவிடும் வகையில் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறோம். குழந்தைகள் ஒரு இசை வாழ்த்து அட்டையை உருவாக்கப் போகிறார்கள் . அவர்கள் முதலில் மின்சுற்று ஒன்றை உருவாக்கி , உங்களை ஆச்சரியப்படுத்தப் போகிறார்கள் .
இந்நிகழ்வில் கொரோனா காலத்திற்கு ஏற்றவாறு ஸ்மார்ட் கேப்பை ( Smart cap) வடிவமைத்த நியூட்டன் பாக்ஸ் கத்தாரில் வசிக்கும் எங்கள் அலுமினி ஆதி என்ற சிறுவன் பங்கேற்கவுள்ளார்.
இப்படி உத்வேகமிக்க குழந்தைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் இக்கால குழந்தைகளுக்கு இன்னும் ஊக்கம் அளிக்க முடியும் என்று நாங்கள் நம்புகின்றோம் " என்கிறார்.
தொடர்புக்கு: https://newtonbox.com/freestemprojects/wowroboticsindia
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81