கலைஞரின் பிறந்த நாளையொட்டி திருச்சியில் கொண்டாட்டம்!

கலைஞரின் பிறந்த நாளையொட்டி திருச்சியில் கொண்டாட்டம்!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞரின் 97 ஆவது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக கொடியினை ஏற்றியும் கலைஞர் படத்திற்கு அஞ்சலி செலுத்தியும் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்நிகழ்வில் திமுக முதன்மைச் செயலாளர் கே‌.என்.நேரு கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள் மகேஷ் பொய்யாமொழி, தியாகராஜன்,வைரமணி ஆகியோரும் எம்எல்ஏக்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், திருச்சி மாநகர செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் திருச்சியில் கலைஞர் அவர்களின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு திமுகவின் முதன்மை செயலாளர் கே என் நேரு பொதுமக்களுக்கு காய்கறிகள் போன்ற நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.