திருச்சி திருவானைக்காவல் மற்றும் ஸ்ரீரங்கம் பகுதிகளில் 4 மருத்துவர்கள் கோவிட் நோய் தொற்றால் இறந்துள்ளனர். திருச்சியின் மிக பிரபலமான மருத்துவர் இறந்த நிலையில் அவருடைய மகனும் இறந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் 9 மருத்துவர்கள் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 6 மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் பணிபுரிய கூடியவர்கள். 3 மருத்துவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவராகவும் ,பயிற்சி மருத்துவராக பணியாற்ற கூடியவர்கள்.
மேலும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் ஒரு பெண் மருத்துவர் உள்ளிட்ட ஏழு பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.உயிர்காக்கும் மருத்துவர்களுக்கு இந்த நிலைமை என்றால் பொதுமக்கள் கண்டிப்பாக உரிய விழிப்புணர்வுடனும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடனும் நடந்துக்கொள்ள வேண்டும்.
Comments