19.07.2025 தேதி திருச்சிராப்பள்ளி வனத்துறை,மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் இணைந்து “காடுகளையும் வனவிலங்குகளையும் காப்போம்” Say no to plastic என்ற தலைப்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தலைமை வனப் பாதுகாவலர் A.பெரியசாமி இ.வ.ப அவர்களின் அறிவுரையின் பெயரில் மாவட்ட வன அலுவலர் S.கிருத்திகா இ.வ.ப அவர்களின் தலைமையில் உதவி வன பாதுகாவலர்கள்
சரவணக்குமார்,தகாதர் பாஷா அவர்களின் மேற்பார்வையில் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்றன. திருச்சிராப்பள்ளி வனச்சரகத்தின் சார்பில் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் திருச்சி வனச்சரக அலுவலர் திரு.வே.ப.சுப்ரமணியம் ,திருச்சி சமூக காடுகள் வனச்சரக அலுவலர் திரு.குலசேகரன், சுழல் தணிக்கை சாவடி வனச்சரக அலுவலர் திரு.பாலு மற்றும் வனவர்கள் ,வனப்பணியாளர்கள் ஜமால் முகமது கல்லூரி NSS மாணவர்கள் மற்றும் தன்னார்வளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு வண்ணத்துப்பூச்சி பூங்கா
மற்றும் மேலணை காப்புக்காடுகளை சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை சுத்தம் செய்தனர் தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்பாட்டின் பாதிப்பு,சுற்றுச்சூழல்பாதுகாப்பு , வனப்பகுதிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு,
வனவிலங்குகளுக்கு பாதுகாப்பான சூழல்,குறித்து பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வன விரிவாக்க மையம் சார்பில் எம். ஆர் பாளையம் காப்பு
காட்டில், நாளந்தா வேளாண்மை கல்லூரி மாணவர்களும், மணப்பாறை வனச்சரகத்தின் சார்பில் மணப்பாறை சுற்றியுள்ள காப்பு காடு பகுதிகளில் ஸ்ரீ குரு பள்ளி மாணவர்களும், துவரங்குறிச்சி வனச்சரகத்தின் சார்பில் துவரங்குறிச்சி வனப்பகுதிகளிலும்,துறையூர் வனச்சரகம்,பச்சமலை வனப்பகுதிகளிலும் துறையூர் சமூக காடுகள் வனச்சரகம், துறையூர் TAP சரகம் சார்பில் வீரமச்சாம்பட்டி,தும்பலம் காப்பு காடு பகுதிகளிலும் வனச்சர அலுவலர்கள் வனவர்கள் மற்றும் வனப் பணியாளர், விவேகானந்தர் ஆண்டாள் மற்றும்
செங்குந்தர் மெட்ரிக் பள்ளி , ஆண்டவர் SRM பல்கலைக்கழகம் உள்ளிட்ட 500 மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்களும்,வாய்ஸ் ட்ரஸ்ட், விடிவெள்ளி, மணப்பாறை சோலம் உள்ளிட்ட 5 தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஆகியோர் பிளாஸ்டிக் ஒழிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மொத்தமாக சுமார் 2.5 டன் அளவிலான பிளாஸ்டிக் பொருட்கள் சேகாரம் செய்து திருச்சி மாநகராட்சி, மணப்பாறை நகராட்சி மற்றும் அந்தந்த உள்ளாட்சிகளில் தூய்மை பணியாளர்களிடம் வழங்கப்பட்டது.
Comments