திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே தனியார் பள்ளியில் நடந்த யோகா உலக சாதனை நிகழ்ச்சியில் உஷ்ட்ராசனா யோகாசனத்தை செய்து சாதனை படைத்த மாணவிக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
திருச்சி சமயபுரம் அருகே பழூரில் இயங்கி எஸ்.வி.எம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாஸ்ட்ரி உலக சாதனை புத்தகத்தில் இடைபெறும் வகையில் யோகா உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பள்ளியில் நான்காம் வகுப்பு பயிலும் மாணவி திஷா (9) என்ற நான்காம் வகுப்பு மாணவி கண்ணாடி பேழைக்குள் தொடர்ந்து 20நிமிடம் 30 வினாடிகள் உஷ்ட்ராசனா யோகாவை செய்து உலக சாதனை படைத்தார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு 8 நிமிடம் 1 வினாடி திறந்த வெளி மேடையில் உஷ்ட்ராசனா செய்து அசத்திய அஞ்சனா சுபாஷ் என்ற மாணவி செய்த சாதனையை மாணவி திஷா முறியடித்ததுடன் கண்ணாடி பேழைக்குள் உஷ்ட்ராசனா யோகாவை செய்த சிறப்பையும் பெற்றுள்ளார்.
அதே மேடையில் எட்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் ராகுல் (13) யோகாவின் சக்ராசானாவை 20 நிமிடம் 30 வினாடி செய்து உலக சாதனை படைத்தார்.சாதனை படைத்த மாணவர்கள் இருவருக்கும் சாதனைக்கான அங்கீகார சான்றிதழை மாஸ்ட்ரி உலக சாதனை தலைவர் ப்ரித்திவிராஜ் பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவர்களுக்கு வழங்கினார்.
யோகாவில் சாதனைகள் படைத்த இரு மாணவர்களை பள்ளி தாளாளர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments