பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகம் இன்று தமிழக முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்படுகிறது தமிழக முதல்வர் சிதம்பரத்தில் இந்த முகாமை தொடங்கி வைக்கிறார் அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு ஊராட்சி மற்றும் காந்தளூர் ஊராட்சிக்கு உட்பட்ட .மக்கள் பயன்பெறும் வகையில் நவல்பட்டு உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தமுகாமிற்கு திருச்சி கலெக்டர் சரவணன் தலைமை வைத்தார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஸ் தொடங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது.
புரட்சிகரமான இந்த திட்டம் நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் 13 துறைகளில் கொண்டு 46 வகையான சேவையில் வழங்கப்படுகிறது.
தற்பொழுது இங்கு நடைபெறும் இந்த மகா நாவல்பட்டு மற்றும் காந்தலூர் மக்களுக்காக நடத்தப்படுகிறது மற்ற ஊர்களை சேர்ந்த மக்கள் வந்திருந்தாலும் அவர்கள் ஏமாற்றம் அடைந்து விடக்கூடாது என்பதற்காக அவர்களது மனுவையும் பெற்று பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது சிதம்பரத்தில் தமிழக முதல்வர் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார் திருச்சி மாவட்டத்தில் இன்று ஆறு இடங்களில் இந்த திட்ட முகாம் நடைபெறுகிறது.
புரட்சிகரமான இந்த திட்டம் நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் 13 துறைகளில் கொண்டு 46 வகையான சேவையில் வழங்கப்படுகிறது.
தற்பொழுது இங்கு நடைபெறும் இந்த மகா நாவல்பட்டு மற்றும் காந்தலூர் மக்களுக்காக நடத்தப்படுகிறது மற்ற ஊர்களை சேர்ந்த மக்கள் வந்திருந்தாலும் அவர்கள் ஏமாற்றம் அடைந்து விடக்கூடாது என்பதற்காக அவர்களது மனுவையும் பெற்று பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது சிதம்பரத்தில் தமிழக முதல்வர் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார் திருச்சி மாவட்டத்தில் இன்று ஆறு இடங்களில் இந்த திட்ட முகாம் நடைபெறுகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில் திமுக அரசியல் திருச்சி மாவட்டத்தில் செய்த வளர்ச்சி திட்ட பணிகள்
ரூ.408 கோடி மதிப்பீட்டில், ‘முத்தமிழறிஞர் கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம்,
ரூ128 கோடி மதிப்பீட்டில் 38 ஏக்கர் பரப்பளவில் ‘அண்ணா கனரக வாகன சரக்கு முனையம்
ரூ.236 கோடி மதிப்பீட்டில், 22 ஏக்கர் பரப்பளவில் ‘பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடி’ அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு இருக்கிறது.
ரூ290 கோடி மதிப்பீட்டில், பெருந்தலைவர் காமராசர் பெயரில் மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம்.
ரூ18 கோடியே 9 இலட்சம் மதிப்பீட்டில் ‘பறவைகள் பூங்கா.
ரூ150 கோடி மதிப்பீட்டில் ‘சர்வதேச ஒலிம்பிக் அகாடமி.
ரூ3 கோடி மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு அரங்கம்!
ரூ4 கோடியே 27 இலட்சம் மதிப்பீட்டில் பச்சமலை சுற்றுலா திட்டம்,
தொழில் புரட்சி ஏற்படுத்திட மணப்பாறையில், 1100 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொடங்கப்பட்டிருக்கிறது. அதில் உலகின் முன்னணி நிறுவனங்களான ஜபில், பெப்சிகோ தொழில் துவங்க உள்ளார்கள். இதனால் 10,000-க்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
மேலும், ரூ.400 கோடி மதிப்பிலான டைடல் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு அந்தப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இப்படி, கடந்த நான்கு ஆண்டுகளில், 26 ஆயிரத்து 66 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்கள் திருச்சிக்காக மட்டுமே நம்முடைய முதலமைச்சரால் தரப்பட்டிருக்கிறது.
மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம் 4 இலட்சத்து 42 ஆயிரத்து 124 பேர் பயன் அடைகிறார்கள்.
புதுமைப்பெண் மாணவிகள் 34 ஆயிரத்து 784 பேர் பயனடைகிறார்கள். தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 16 ஆயிரத்து 955 பேர் மாணவர்கள் பயன்பெறுகிறார்கள்.
காலை உணவுத் திட்டத்தில் 86 ஆயிரம் பிள்ளைகள் பயன் அடைகிறார்கள்.
முதல்வரின் முகவரி திட்டத்தில், தீர்வு காணப்பட்டது 3 இலட்சம் மனுக்கள். அதாவது 3 இலட்சம் குடும்பங்கள்.
நான் முதல்வன் திட்டத்தில், 68 ஆயிரம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
72 ஆயிரத்து 767 பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
5 ஆயிரத்து 843 விவசாயிகளுக்கு புதிய இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
70 ஆயிரத்து 360 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ4 ஆயிரத்து 160 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது.
ரூ99 ஆயிரத்து 181 கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 4000 வீடுகள், 54 ஆயிரத்து 428 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு இருக்கிறது.
மேலும், கடந்த மே 9ஆம் தேதி பஞ்சப்பூர் பேருந்து முனையத்தை திறந்து வைத்தப் பின்னர் ரூ527 கோடி ரூபாய் மதிப்பிலான, 3 ஆயிரத்து 597 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ1,032 கோடி மதிப்பிலான 7 ஆயிரத்து 122 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் வீட்டுமனை பட்டா கலைஞர் மகளிர் உரிமை தொகை கேட்டு அதிக விண்ணப்பங்கள் வரப்படுகிறது இதற்காக பொதுமக்களுக்கு கூடுதல் கவுண்டர்கள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார் இதனால் மக்கள் அதிகம் பயன்பெறுவார்கள் என்றார்.
இந்த விழாவில் ஜி ஆர் டி ஓ அருள் பிரகாசம்
திருவெரும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கும்பக்குடி கங்காதரன், உட்பட அரசு அலுவலர்களும் கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்
Comments