நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று (20.07.2025) திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தின் செயல்பாடுகளையும், பேருந்துகளின் இயக்கங்களையும், பயணிகள் பயன்படுத்தும் வகையில்
அமைக்கப்பட்டுள்ள உணவகங்கள் உள்ளிட்ட கடைகள் சிறப்பான முறையில் இயங்கி வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பயணியர்களிடம் கலந்துரையாடினார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன்,
மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் , மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், நகரப் பொறியாளர் சிவபாதம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சிராப்பள்ளி மண்டல பொதுமேலாளர் திரு.சதீஷ்குமார் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.
Comments