திருச்சி, மண்ணச்சநல்லூர் தொகுதியில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரசார பயணம் மேற்கொண்டு அ.தி.மு.க., பழனிசாமி பேசியதாவது:
தி.மு.க.வின் நான்கு ஆண்டு கால ஆட்சியில் விவசாயிகளுக்கும் விவசாயத்துக்கும் எந்த நன்மையும் கிடைக்கவில்லை. விவசாயிகள் வாங்கிய பயிர் கடன் 12,100 கோடி தமிழக வரலாற்றில் இல்லாத வகையில், அ.தி.மு.க.,
ஆட்சியில் இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டது. 2400 கோடி வறட்சி நிவாணம் வழங்கி, விவசாயிகளை கண்னை இமை காப்பது போல் காத்துள்ளோம். மணச்சநல்லூர் தொகுதி தி.மு.க., எம்எல்ஏ.,மருத்துவமனையில் கிட்னி திருடியதாக, அறுவை சிகிச்சைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
அப்படி என்றால் தவறு நடந்திருக்கிறது உண்மைதானே. ஆனால் இதுவரை எம்.எல்.ஏ. மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மனித உறுப்பை திருடும் ஒரே அரசு தி.மு.க., அரசு தான். வறுமையை பயன்படுத்தி ஏழைகளின் உறுப்பை திருடுவது எவ்வளவு பெரிய குற்றம் தெரியுமா? கண்டிப்பாக நீதிமன்றம் வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே எம்.எல்.ஏ., பத்திரிக்கையாளர் கேள்விக்கு மனிதாபிமான முறையில் பதில் அளித்திருக்கிறார். மக்களை
ஏளனமாக பேசும் எம்.எல்.ஏ., மீண்டும் போட்டியிட்டால், அவரை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். தி.மு.க., அரசு, மத்திய அரசு எதிர்ப்பிலேயே கவனம் செலுத்துவதால், தமிழகத் துக்கு தேவையான திட்டங்களை பெற முடியவில்லை. ஆளும் கட்சியாக , இல்லாவிட்டாலும், மக்கள் திட்டங்களுக்காக, மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து, உதவி செய்து வருகிறோம். அ.தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்ட நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை நிறைவேற்றினால் காவிரி நீர் மாசுபடுவது தடுக்கப்படும். தலைவாசல் பகுதியில் அமைக்கப்பட்ட கால்நடை பூங்கா திட்டத்தை தி.மு.க. அரசு கொண்டு வராமல் உள்ளது. விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் கொண்டு வந்த
திட்டங்களை இந்த அரசு முடக்கி வைத்துள்ளது. ஆட்சிக்கு வருவதற்காக, அறிவித்த திட்டங்கள் எதையும் தி.மு.க., அரசு கொண்டு வரவில்லை. ஆட்டு மூத்த தமிழக மக்களுக்கும் அதிமுக ஆட்சியில் நன்மை கிடைத்தது. எப்போது ஆட்சிக்கு வந்தாலும் மத்தியிலும், மாநிலத்திலும் ஆதிக்கம் செலுத்தி கருணாநிதி குடும்பம் தான் பலனடைகிறது. இவர்களின் ஆட்சி தொடர வேண்டுமா? இவ்வாறு அவர் பேசினார்.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments