திருச்சி மாவட்டம், வாத்தலை அருகே உள்ள கல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவில், கற்பக விநாயகர் கோவில் மற்றும் மதுரைவீரசாமி கோவில்கள் புனரமைக்கும் திருப்பணி நடக்க இருக்கிறது.
இதனை முன்னிட்டு நேற்று மூன்று கோவில்களிலும் பாலாலயம் நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, புண்யாகாவஜனம் மற்றும் பூர்ணாஹூதி உள்ளிட்ட பாலாலய சிறப்பு ஹோமம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இந்திராகாந்தி, குணசீலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குருநாதன், ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் தங்கமணி, சென்னை நாகா ஃபிலிம்ஸ் உரிமையாளர் நாகராஜன் உள்பட கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Comments