திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 09 முதியவர்கள் மற்றும் மனநலம் குன்றிய ஆண் ஒருவர் மீட்பு
தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் ஜிஎம் ஈஸ்வர ராவ், உத்தரவின் பேரில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் அபிஷேக் மற்றும் உதவி ஆணையர் பிரமோத் நாயர் ஆகியோர்களது மேற்பார்வையில்
திருச்சி RPF இன்ஸ்பெக்டர் K. P. செபாஸ்டியன் தலைமையில், M.குருநாதன், ASIPF/TPJ மற்றும் D.செல்வராஜா, ASIPF/CPDS/TPJ மற்றும் போலீஸார் நேற்று முன்தினம் இரவு ஜங்ஷன் ரயில் நிலைய வளாகத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஆதரவற்ற நிலையில் ஒன்பது முதியவர்கள் மற்றும் மனநலம் குன்றிய ஒருவர் பிரதான நுழைவாயில் பகுதியில் நடமாடுவதைப் பார்த்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது அவர்கள் தங்கள் பெயர் மற்றும் முகவரியை வெளிப்படுத்தினர். 1) லக்ஷ்மையா, ஆண் (50), 2). கிளி, பெண் (85), 3).சுரேஷ், ஆண் (51), 4).பொன்னையா, ஆண், (68),
5).எஸ்.குமார், ஆண் (73), 6).செல்வகுமார், ஆண் (41), 7).தனம், பெண் (60), 8).செல்லம்மாள், பெண் (60), 9).அலமேலு, பெண், (85), 10). சௌகர், ஆண், (23) (மனநலம் குன்றியவர்), உத்தரபிரதேசம், என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அனைவரும் மீட்கப் பட்டு, திருச்சி ஸ்ரீ அறக்கட்டளை முதியோர் இல்லம் மற்றும் மன நோயாளிகள் இல்லத்தில் பராமரிப்புக்காகவும், பாதுகாப்பிற்காகவும் ஒப்படைக்கப்பட்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision