திருச்சி ரயில்வே ஜங்ஷனில் ரயில் மூலம் மற்ற மாவட்டங்களுக்கு செல்வதற்கு நாள்தோறும் ஏராளமான பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் இன்று பிரதான நுழைவு வாயிலில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்யும் ஸ்கேனர் இயந்திரம் மூலம் பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டது.

அதில் இரண்டு பயணிகளின் உடமைகளை சோதனை செய்தபோது ஒரு பயணியின் உடமைகளில் வைத்து கொண்டு வரப்பட்ட 3 கிலோவிற்க்கும் அதிகமான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த நகைகளை கொண்டு சென்ற சென்னையை சேர்ந்த லெப்பை தம்பி மற்றும் அவரது நண்பர் ரியாஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.
இதில் எந்தவித ரசீது இல்லாமல் ரூ 1 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 250 கிராம் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. அதன்பின் வணிகவரித் துறைக்கு கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் வந்த வணிக வரித்துறை அதிகாரிகள் அந்த நகைகள் அனைத்தும் உரிய ரசீது ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டது உறுதிப்படுத்தி 9 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
மேலும் வெளிமாநில மதுபான பாட்டில்களும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அபராதத் தொகையை லப்பை தம்பி மற்றும் ரியாஸ் ஆகிய இருவரும் செலுத்திவிட்டு அந்த நகைகளை மீண்டும் சென்னைக்கு எடுத்துச் சென்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn







Comments