திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான 70 சென்ட் இடம் திருவானைகோவில் – சென்னை டிரங் ரோட்டில் உள்ளது. அதில் 6 சென்ட் இடத்தை கிரி மற்றும் ஆனந்த் ஆகிய இருவரும் சேர்ந்து கோயில் இடத்தில் சுற்று சுவர் அமைத்து கட்டியுள்ளனர்.
மேற்படி இந்த இடத்திலிருந்து திருவானைக்கோயில் ரோட்டிற்கு வருவதற்கு கோவிலுக்கு பாத்தியப்பட்ட தெற்குப்பகுதியில் தன்னிச்சையாக பாதை அமைத்து பெரிய இரும்பு கேட் அமைத்து உள்ளனர். அந்த இடத்திற்கான பட்டா அனைத்தும் கோயில் பெயரில் உள்ளது.

இதனை அறிந்த ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து உடனடியாக கோயில் பணியாளர்களுடன் சென்று பொக்லைன் உதவியுடன் அந்த இடத்தில் இருந்த வேலி தடுப்பு சுவர்களை இடித்து தள்ளி அந்த இடத்தை மீட்டனர். மீட்கப்பட்ட கோயில் இடத்தின் மதிப்பு ஒரு கோடியே 80 லட்ச ரூபாய் ஆகும்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO







Comments