திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், திருச்சி மாநகரத்தில் சரித்திர பதிவேடு ரவுடிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர்களின் தலைமையில் அதிரடியாக சோதனை செய்யவும், திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில், சட்ட

விரோதமாக செயல்களில் ஈடுபட்டுவரும் ரவுடிகள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை மேற்கெள்ளும் வகையில், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் வடக்கு, தெற்கு மற்றும் தலைமையிடம், அனைத்து சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது.

அதன்படி, திருச்சி மாநகரில் உள்ள 14 காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசித்துவரும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளின்” செயல்பாடுகளை சம்மந்தப்பட்ட காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் தலைமையில் இன்று 15.01.2026-ஆம் தேதி காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை “அதிரடி சோதனை” நடைபெற்று வருகிறது.

இந்த சோதனையில் பாலக்கரை காவல் நிலையத்தில் 4 சரித்திர பதிவேடு குற்றவாளிகளும், ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் 2 சரித்திர பதிவேடு குற்றவாளியும், கோட்டை காவல் நிலையத்தில் 1 சரித்திர பதிவேடு குற்றவாளியும், அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் 1 சரித்திர பதிவேடு குற்றவாளியும், உறையூர் காவல் நிலையத்தில் 1 சரித்திர பதிவேடு குற்றவாளியும், காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் 1 சரித்திர பதிவேடு குற்றவாளியும் என மொத்தம் 10 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் திருச்சி மாநகரில் கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சரித்திர பதிவேடு குற்றவாளிகள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது தெரியவரும் பட்சத்தில் அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments