திருச்சியில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 100 விவசாயிகளுக்கு 10 வகை காய்கறிகள், கீரை விதைகள்!!
ஒவ்வொறு ஆண்டும் ஜூன் 5 ,உலக சுற்றுச்சூழல் நாள் கடைபிடிக்கப்படுகிறது. 2020 ஆம் ஆண்டு மையக்கருத்து “உயிரினபன்மயம்” மனிதர்கள் மட்டுமல்ல, ஆடு, மாடு, கோழி வீடு பிராணிகள், வன விலங்குகள், பறவைகள், மீன்கள், கடல்வாழ் உயிரினங்கள், செடி, கொடி, மரம், தாவரங்கள் போன்ற அனைத்து உயிரினங்களும் பாதுகாக்க வேண்டும் என்று உணர்த்த படுகிறது.
தமிழ்நாடு அரசு சுற்றுசூழல் துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் வாய்ஸ் அறக்கட்டளை இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே எதுமலை கிராமத்தில் 100 விவசாயிகளுக்கு 10 வகை காய்கறி, கீரை விதைகள் வழங்கப்பட்டன.
வாய்ஸ் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் கவிதா , விக்டோரியா மற்றும் இயற்கை விவசாய ஆர்வலர் புஷ்பராஜ் ஆகியோர் விவசாயிகளுக்கு விதைகள் வழங்கினார். இந்த ஆண்டு சுற்றுச்சூழல் நாள் கூடுதல் கருத்தாக “இயற்கை பாதுகாப்பிற்கு இதுதான் நேரம்” என்கின்ற தலைப்பில் பேசப்பட்டது.
லால்குடி கல்வி மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் இயற்கையை போற்றுவோம் என்றும் உயிரினபன்மயத்தை கொண்டாடுவோம் என்றும் உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது.