துறையூர் அருகே புளியஞ்சோலை வனப்பகுதியில் சம்பூர்ணம் மூதாட்டி இவர் வனப்பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த பொழுது சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஆட்டுக்குட்டியை உயிருடன் விழுங்கியுள்ளது, மூதாட்டி சம்பூர்ணம் எனது ஆட்டுக்குட்டி கத்துகிறது காப்பாற்றுங்கள் என கூறி கதறினார்..
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே புளியஞ்சோலை வனப்பகுதி அருகே சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஆங்காங்கே வசித்து வருகின்றனர், இவர்கள் வளர்க்கும் ஆடு, மாடு, கோழி ஆகிய விலங்குகளை மலைப்பகுதிகளில் விட்டு மேய்ப்பது வழக்கமாக உள்ளது, இந்நிலையில் சம்பூர்ணம் மூதாட்டி வனப்பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த பொழுது சுமார் 10 அடி நீளமுள்ள
சுமார் 100 கிலோ எடையுடைய மலைப்பாம்பு ஆட்டுக்குட்டியை உயிருடன் விழுங்கியுள்ளது, இதை நேரில் கண்ட சம்பூர்ணம் எனது ஆட்டுக்குட்டி பாம்பு விழுங்கி விட்டது எப்படியாவது காப்பாற்றுங்கள் என கூறியும் ஆட்டுக்குட்டி கத்துகிறது கத்துகிறது என கூறி நான் தான் எப்படி மலைப்பகுதிகளில் வாழ்வது என கதறி அழுது புலம்பினார்,
அருகில் உள்ளவர்கள் அருகே செல்லாதீர்கள் எனக் கூறியும் பாம்பு விழுங்கி விட்டது காப்பாற்ற முடியாது வருத்தத்துடன் தெரிவித்தனர், மீண்டும் மூதாட்டி கதறி அழுத காட்சி அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது, இந்த காட்சிகள்
வீடியோ வைரலாகிறது
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
புளியஞ்சோலை வனப்பகுதியில் ஆட்டுக்குட்டியை உயிருடன் முழுங்கிய 100 கிலோ எடையுள்ள மலைப்பாம்பு

Comments