மேடையில் பாடி அசத்திய 100 வயது பாட்டி

மேடையில் பாடி அசத்திய 100 வயது பாட்டி

திருச்சி மாவட்டம் அந்த நல்லூர் ஒன்றியத்தில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் இரண்டாம் ஆண்டு வெற்றி விழா & மகளிர் தின விழாவாக பெரியார் நகர் இராஜஇராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கல்விக் குழுத் தலைவர் வே. பொற்கொடி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் மீனா வரவேற்புரை ஆற்றினார்.  வட்டாரக் கல்வி அலுவலர்கள் மருதநாயகம், ஸ்டான்லி இராஜசேகர், ஜெயலெட்சுமி, மீனாட்சி வாழ்த்துரை வழங்கினர். இராதா ஸ்ரீரங்கம் கோட்ட கல்விக் குழு உறுப்பினர், திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளஞ்சேட்சென்னி கல்வியாளர்கள் சிவக்குமார், ரெங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

PLA நிறுவன இயக்குநர் கண்ணாத்தாள் அண்ணாமலை சிறப்புரை ஆற்றினார். தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 100 வயது பாட்டி அருளாயி, ஓய்வு பெற்ற ஊட்டச்சத்து மேற்பார்வையாளர் சரோஜா ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டது. இருவரும் மேடையில் பாட்டுப் பாடி அசத்தினர். 100 வயதான அருளாயி பாட்டி தாலாட்டு பாடல் ஒன்றை இசையோடு பாடி அசத்தினார். 100 வயது வரை நோய் எதுவும் இன்று வரை தன் பணிகளை தானே செய்வது சிறப்பாகும். அந்தநல்லூர் ஒன்றிய இல்லம் தேடிக் கல்வித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பெல்சிட்டா மேரி நன்றி தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision