முக்கொம்பு கொள்ளிடத்தில் 10 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டது

முக்கொம்பு கொள்ளிடத்தில்  10 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டது

முக்கொம்பு மேலணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீர் கொள்ளிடம் பழைய கதவணையில் நீர்வளஆதாரத்துறை அதிகாரிகளால் திறந்துவிடப்பட்டது. கொள்ளிடம் ஆற்றின் கரையோரப் பகுதிகள் மற்றும் ஆற்றில் உள்ளே உள்ள சலவைத் தொழிலாளிகள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு கேட்டுக்கொண்டுள்ளார். 

கொள்ளிடம் கதவணை கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பொழுது 9 மதகுகள் உடைந்தது.

இதனை அடுத்து புதிய கொள்ளிடம் கதவணை 2019 மார்ச்சில் ரூ 387 கோடியில் பணிகள் துவங்க அடிக்கல் நாட்டப்பட்டது. பணிகள் முடிக்க இருபத்தி நான்கு மாத காலம் ஆகும் என குறிப்பிடப்பட்ட நிலையில் தற்போது புதிய கதவணை 92% மட்டும் பணிகள் முடிவடைந்துள்ளது. 

 தற்போது மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரித்து கொண்டே இருப்பதால் காவிரியில் ஏற்கனவே 12ஆயிரம் கன அடி நீர் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வெள்ளபெருக்கு ஏற்படாமல் தடுப்பதற்கு கொள்ளிடம் பழைய கதவணை இருந்து 32 மதகுகள் மூலம் 10 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது . புதிய கதவணையில் 45 மதகுகளும் முழுவதுமாக திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

நீர்வளஆதாரத்துறை நடுக்காவேரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் திருவேட்டைசெல்வம் தலைமையில் உதவி செயற்பொறியாளர் ஜெயராமன் உள்ளிட்ட பணியாளர்கள் தண்ணீரை திறந்துவிட்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn