திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையின் பெண் மருத்துவர் திவ்யா. இவரது ஆதார் அட்டையை பயன்படுத்தி வாங்கப்பட்ட சிம்கார்டில் இருந்து பெண்களின் ஆபாச புகைப்படங்கள் பகிரப்பட்டுவதாகவும்,

இவரது மொபைல் எண்ணைப் பயன்படுத்தி மும்பை கனரா வங்கியில் தொடங்கப்பட்ட புதிய வங்கிக் கணக்கில் இருந்து 6 கோடி ரூபாய் பண பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாகவும், திவ்யாவிற்கு ஜாமீனில் வெளிவர முடியாத வகையிலான கைது வாரண்ட் பிரப்பிக்கப்பட்டுள்ளதாகவும், மும்பை சாண்டா குரூஸ் காவல் நிலைய போலீஸ் அதிகாரி என கூறிக்கொண்டு பேசிய சிலர்,

திவ்யாவை ஏமாற்றி அவரது விபரங்களை கேட்டு ஆன்லைன் மூலமாக ரூ.11 லட்சம் பணத்தை பறித்துக்கொண்டனர். இது குறித்து திருச்சி சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments