திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டுகுழு அலுவலகம் எண்.3க்குட்பட்ட 37வது வார்டு, கணபதி நகரில் உள்ள 6 குறுக்குத் தெருக்கள், பீடி காலனி, ஆர்.ஆர் காலனி ஆகிய பகுதிகளில் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிந்து பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாகவும்,

பொதுசுகாதாரத்திற்கும் சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. இது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுக்க கோரி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் மாநகராட்சி அலுவலர்களுக்கு புகார்கள் அளித்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாண்புமிகு மேயர் திரு.மு.அன்பழகன் மற்றும் ஆணையர் திரு.லி.மதுபாலன் ஆகியோர்களின் உத்தரவின்படி,

சுகாதார அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் காவல்துறை உதவியுடன் அப்பகுதியின் தெருக்களில் பரோபரியாய் சுற்றித்திரிந்த 13 பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தினர். மேலும், பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படாதவாறு இது போன்ற பன்றிகளை பிடிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ளது.

பொது மக்களுக்கு சுகாதார கேடு விளைவிக்கும்படி பன்றிகள் மாநகராட்சி எல்லைக்குள் சுற்றித் திரிந்தால் அவற்றை வளர்க்கும் உரிமையாளர் மீது தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப் படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments