குட்கா விற்பனை செய்த 13 கடைகளுக்கு அபராதம் விதித்து சீல் - இருவர் காவல் துறையிடம் ஒப்படைப்பு

குட்கா விற்பனை செய்த 13 கடைகளுக்கு அபராதம் விதித்து சீல் -  இருவர் காவல் துறையிடம் ஒப்படைப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் M.பிரதீப்குமார் உத்தரவின் பேரில் காவல் துறை மூலமாக மாவட்ட பகுதியில் உள்ள காவல் நிலையங்களிலிருந்து பெறப்பட்ட பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு வழிகாட்டுதலின் பேரில் மாவட்ட பகுதியில் உள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைகள் அனைத்தும்

நேற்று (24.06.2024) அமைக்கப்பட்ட 8 குழுக்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், ஆயுதப்படை பிரிவை சார்ந்த காவலர்கள், சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துறையினர் உள்ளடங்கியோர் 11 கடைகளும் இன்று புதியதாக துரைச்சாமிபுரத்தில் உள்ள நாகநாதர் டீ கடையில் சுமார் 1 கிலோ தடைசெய்யப்பட்ட பொருட்களும், ஜீவா நகர் பாண்டியன் ஸ்டோரில் சுமார் 7 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களும் ஆகிய இரண்டு கடைகளில் பறிமுதல் செய்யப்பட்டது.

மொத்தம் 13 கடைகளுக்கு சுமார் 5,50,000/- (ஐந்து இலட்சத்து ஐம்பதாயிரம்) அபராதம் விதித்து, சீலிடப்பட்டது. மேலும், அந்த இரண்டு கடைகளின் குற்றவாளிகளும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் R.ரமேஷ்பாபு கூறுகையில்...... தொடர்ந்து இது போன்ற கடைகள் வரும் நாட்களில் மாவட்டம் முழுவதும் சீலிடப்படும் என்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து, தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தரநிர்ணய சட்டம் 2006-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்த கடை சீல் செய்யப்படும் என்று கூறினார்.

இதுபோன்று பொதுமக்களும் உணவு சம்பந்தமான கலப்படங்கள் மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட உணவு பொருட்களை தாங்கள் உணவுபொருள் வாங்கும் கடைகளில் கண்டறியப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார்.

புகார் எண் : 96 26 83 95 95

மாநில புகார் எண் : 94 44 04 23 22

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision