130% வரி உயர்வு அதிர்ச்சி அடைந்த திருச்சி மாநகர பொதுமக்கள்

130% வரி உயர்வு அதிர்ச்சி அடைந்த திருச்சி மாநகர பொதுமக்கள்


 எவ்வித முன்னறிவிப்புமின்றி வரிகள் உயர்த்தப்பட்டதால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர், திருச்சி மாநகராட்சி பாதாள சாக்கடை வரி  130 % தண்ணீர் வரியை 12.5 % உயர்த்தி உள்ளது, ஏற்கனவே கொரானா தொற்று பரவலாக உள்ள நிலையில் மக்கள் பொருளாதார அடிப்படையில் மிகுந்த பின்தங்கிய நிலையில் இருக்கும் பொழுது இது போன்ற வரிகள் உயர்த்தப்படுவது மக்களுக்கு எதிரான செயலாகும்.

 ஏற்கனவே 2017 ஏப்ரல் மாதத்தில் தண்ணீர் வரி உயர்த்தப்பட்டது. திருச்சி மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்  ஆண்டிற்கான தண்ணீர் வரி 1,920 இல் இருந்து 2,160 வீட்டிற்கு தண்ணீர் இணைப்பு தேவை எனில் அதற்கு முன் பணமாக 6000லிருந்து 6500ஆக உயர்த்தியுள்ளது.
தொழிலகங்கள்,நிறுவனங்கள் ஆகியவற்றில்  தண்ணீர் வரி 10 சதவீதத்திலிருந்து 10.5 சதவீதமாகவும் பாதாள சாக்கடை வரி ரூபாய் 720 இல் இருந்து 1,680 ஆகவும் ஒரு ஆண்டிற்கு உயர்த்தப்பட்டுள்ளது 
  இச்சட்டமானது ஏப்ரல் 1,2021 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

  சிலர் தங்களது தொழில்களில் நஷ்டம் அடைந்துள்ளனர், வேலை இல்லாமல் சில பாதிக்கப்பட்டுள்ளனர் இந்த நேரத்தில் இதுபோன்ற வரி  உயர்வானது மிகவும் கண்டிக்கத்தக்கது ,
மாநகராட்சியில் இருந்து கிடைக்கும் குடிநீர்  சுத்தமாக இல்லாததால் மக்கள் கடைகளில் தண்ணீர் வாங்கும் நிலை உள்ளது இப்படி இருக்க  வரியை மட்டும் உயர்த்துவது எவ்விதத்தில் சரியாக இருக்கும் என்று லிங்கம் நகர்  குடியிருப்புவாசி சிவக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.


 வரி உயர்வால்  வீட்டின் உரிமையாளர்கள் வாடகையும் உயர்த்தியுள்ளனர் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.
 இதுகுறித்து  மாநகராட்சி ஆணையர்  சிவசுப்பிரமணியம் கூறுகையில் வருவாய் அதிகரிப்பில் இதுவும் ஒரு பகுதி.
 சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டு பல நாட்களுக்கு பிறகு இதை நடைமுறைப்படுத்தி உள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu