55 வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு திருச்சி சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளி திருச்சி புத்தூர் கிளை நூலகம் மற்றும் வாசகர் வட்டம் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நந்தவனம் பவுண்டேஷன் இணைந்து 134 மாணவர்கள், 134 வினாடிகள், 134 நேரு முகமூடியுடன் நேருவின் 134 வது பிறந்தநாள் குழந்தைகள் தினவிழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தன் தலைமை வகித்தார். புத்தூர் கிளை நூலக நூலகர் புகழேந்தி நந்தவனம் சந்திரசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார் குழந்தைகள் தினம் குறித்து பேசுகையில்,… குழந்தைகள் தினம் குழந்தைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட நாள் ஆகும். இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14-ம் தேதி நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. நேரு குழந்தைகளை மிகவும் நேசித்தவர். குழந்தைகள் மத்தியில் பிரபலமாக இருந்ததால், ‘சாச்சா நேரு’ (Chacha Nehru) என்று போற்றப்பட்டார். 
இந்நாளில் குழந்தைகளின் உரிமை, அவர்கள் நாட்டின் எதிர்காலம் மற்றும் அவர்கள் கல்வி கற்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நேரு குழந்தைகளை நாட்டின் சொத்தாக கருதினார். குழந்தைகளுக்கு தரமான கல்வி வேண்டும் என நினைத்தவர். இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவின் எதிர்காலம். நாம் அவர்களை வளர்க்கும் விதம் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்று நேரு கூறினார்.
1956-ம் ஆண்டு முதல் நவம்பர் 20-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் படி ‘உலகளாவிய குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. பிறகு 1964-ம் ஆண்டு பண்டிட் நேருவின் மறைவுக்குப் பிறகு, அவரது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்தியாவில் கொண்டாட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டது. அப்போதிருந்து, நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது என்றார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments