தமிழ்நாடு தொழிலாளர் ஆணையர் முதன்மைச் செயலாளர் டாக்டர் அதுல் ஆனந்த், கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெயபாலன் மற்றும் திருச்சி தொழிலாளர் இணை ஆணையர், திவ்வியநாதன் ஆகியோர் அறிவுரையின்படி, திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (சட்ட அமலாக்கம்) தலைமையில், தொழிலாளர் துணை மற்றும் தொழிலாளர் உதவி தேசிய பண்டிகை விடுமுறை தினமான நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு,

திருச்சி மற்றும் புதுக்கோட்டைமாவட்டங் களில் 179 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்காத மற்றும் விடுமுறை நாட்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, இரடிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை அளிக்காதகாத 136 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு அவற்றின்மீது சட்டபடியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அரசு விடுமுறை நாட்க ளில் விடுமுறை அளிக்காமல் தொழிலாளர்களை பணிபுரிய நிர்ப்பந்திக்கும் நிறுவனங்கள் மீது 1958-ம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் தேசிய பண் டிகை மற்றும் சிறப்பு விடுமுறைகள்) சட்டத்தின்கீழ் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments