தடய அறிவியல் துறைக்கு 14 நடமாடும் ஆய்வக வாகனங்கள்!

தடய அறிவியல் துறைக்கு 14 நடமாடும் ஆய்வக வாகனங்கள்!

தமிழக முதலமைச்சர் அவர்கள் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் பயன்பாட்டிற்காக குற்றம் நிகழ்விடத்திலேயே ஆரம்பக்கட்ட ஆய்வுகளை மேற்கொள்ள ஏதுவாக ரூ.3,92,70,000/- செலவில் உருவாக்கப்பட்டு 14 நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நடமாடும் தடய அறிவியல் ஆய்வகங்கள் குற்றவாளிகளை விரைவில் கண்டறிய குற்ற நிகழ்விடத்திலேயே குற்றப்புலனாய்வாளர்களுக்கு அறிவியல்சார் சேவைகளை வழங்கி வருகின்றன.

இந்த வாகனத்தின் சிறப்பம்சமாக குற்ற நிகழ்ந்த சம்பவ இடத்திலேயே இரத்தக்கறை, வெடி பொருள்கள், போதை பொருள் மற்றும் துப்பாக்கி சுடு படிமங்கள் ஆகியவற்றை சம்பவ நடைபெற்ற இடத்திலேயே நடமாடும் தடய அறிவியல் வாகனத்தில் உள்ள பரிசோதனை கூடத்தில் பரிசோதிக்க முடியும்.

மேலும் குற்ற நிகழ்விடத்திலேயே குற்றச்செயலை அடையாளம் காணுவதற்கும், எவ்வித வெளிப்புற மாசுபடுதலுக்கும் தடய பொருள்கள் உட்படாதவாறு ஆய்வு மேற்கொள்வதற்கு வாகனத்தின் உட்கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் குற்ற சம்பவங்களை குறுகிய காலத்தில் புலனாய்வு செய்து, குற்றத்தை கண்டுப்பிடிக்க முடியும்.

இவ்வாகனங்கள் சென்னை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, மற்றும் திருப்பூர் மாநகர ஆணையரகங்கள், வேலூர், தர்மபுரி, கோயம்புத்தூர், நீலகிரி, மதுரை, விழுப்புரம், இராமநாதபுரம், தஞ்சாவூர் ஆகிய காவல் மாவட்டங்களின் தடய அறிவியல் ஆய்வக பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழக முதலமைச்சர் அவர்கள் தடய ஆய்வக வாகனங்களை தொடங்கி வைத்து, 14 பிரத்யேக ஆய்வு பிரிவுகளுடன் ஆய்வுகள் சர்வதேச தரத்திற்கு இணையாக மேற்கொள்ளப்பட்டு வருவதற்காக பாரட்டியும், தடய அறிவியல் துறையின் தலைமை ஆய்வகம் சர்வதேச தரச்சான்றிதழ் பெற்றமைக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மேற்கண்ட பிரத்யோக நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனத்தால் குற்றச்சம்பவங்கள் குறித்த துரிதமான ஆய்வுகளின் முடிவுகள் பெறப்பட்டு, குற்றச்சம்வபங்களில் தெளிவாகவும், விரைவாகவும் விசாரணை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என திருச்சி மாநகர காவல் ஆணையர்  தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO