டிவிஎஸ் நிறுவனத்தின் 146 வது நிறுவனர் நாள் விழா

டிவிஎஸ் நிறுவனத்தின் 146 வது நிறுவனர் நாள் விழா

டிவிஎஸ் நிறுவனத்தின் 146 ஆவது நிறுவனர் நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது டிவிஎஸ் அசோக் லேலாண்ட் இந்த இரண்டு மந்திர வார்த்தைகள் இன்றி தென்னிந்தியாவின் சாலை போக்குவரத்து சரித்திரத்தை எழுதவே முடியாது.


 1912 இல் டிவி சுந்தரம் ஐயங்கார் புதுக்கோட்டை தஞ்சாவூர் மார்க்கத்தில் பேருந்து இயக்க ஆரம்பித்தது சாலை போக்குவரத்து வரலாற்றில் வலுவான தொடக்கம்.
 சாலைப்போக்குவரத்து சார்ந்த தொழில்கள் பலவற்றிலும் டிவிஎஸ் நிறுவனம் அழுத்தமாக கால் பதித்தது அடுத்த கட்ட வளர்ச்சி.

அசோக் மோட்டார்ஸ் எண்ணூரை மையமாகக் கொண்டு வாகன தயாரிப்பு ஆரம்பித்ததும் டிவிஎஸ் நிறுவனமும் அசோக் லேலாண்டும் கைகோர்த்தது மிகப்பெரிய திருப்புமுனை.

 இன்றைக்கு தமிழகத்தில் ஓடும் சுமார் 90% மேற்பட்ட பேருந்துகளும் லாரிகளும் அசோக் லேலாண்ட் உடையவை இது விற்பனை மற்றும் சர்வீஸ் மேற்கொள்ளும் டிவிஎஸ் நிறுவனத்தின் கூட்டணியால் சாத்தியமாகி இருக்கிறது.

 இந்த இரு நிறுவனங்களின் அளவிட இயலாத பங்களிப்பால் மட்டுமே இன்றைக்கு தமிழகம் சாலைப்போக்குவரத்தில் இவ்வளவு உயரிய இடத்தை அடைந்திருக்கிறது.

 பிரிட்டிஷார் காலத்தில் நீராவி எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்களின் சக்கரங்கள் உருண்டோட ஆரம்பித்த நிகழ்விலிருந்து 2016 அசோக் லேலாண்ட் அறிமுகப்படுத்தி இருக்கும் இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பஸ் வரை சாலைப்போக்குவரத்து சரித்திரத்தை பல்வேறு பரிணாம ங்களில் விரிவாக கொண்டு சென்றுள்ளது.

வாகன போக்குவரத்து துறையில் 1912 இல் டி வி சுந்தரம் ஐயங்கார் அடியெடுத்து வைத்தார் தென்னிந்திய சாலைப்போக்குவரத்து வரலாற்றில் நிகழ்வின் மாபெரும் தொடக்கமானது.

 டிவிஎஸ் நிறுவனம் அசோக் லேலாண்ட் நிறுவனம் 1951ல் கைகோர்த்தன அசோக் லேலண்ட் வாகனங்களின் விற்பனையையும் பராமரிப்பியையும் டிவிஎஸ் கவனித்துக் கொள்ள ஆரம்பித்தது.

 இந்த இரண்டு மாபெரும் நிறுவனங்களும் கைகோர்த்து தென்னிந்திய சாலை போக்குவரத்து வரலாற்றில் புதிய திருப்புமுனையாக  அமைந்தது.

டிவி சுந்தரம் 
அய்யங்காரரின் பிறந்த நாளை நிறுவனர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது அவர் 146 வது பிறந்த நாளான இன்று அந்நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அவர்கள் பணி காலத்தில் ஆண்டுகளுக்கு ஏற்றவாறு  பரிசுகளும்  டிவி சுந்தரம் அய்யங்காரின் முகம் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயமும் பரிசாக வழங்கப்பட்டது.

 மேலும் இந்த ஆண்டு முழுவதும் ரத்ததானம் செய்த மக்களை அழைத்து அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது அது மட்டும் இன்றி இந்த ஆண்டு முழுவதும் விபத்தில்லா சாலைவிதிகளை கடைப்பிடித்த தொழிலாளர்களை அழைத்து அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

 இந்நிகழ்வில் திருச்சி வி டாட் நிறுவனத்தின்  துணை தலைவர் ஆலிவர்சாம்,சுபம் லாஜிஸ்டிக் MD சுந்தர்ராஜன், ஆகிய சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் மேலும்திருச்சி தஞ்சாவூர் பெரம்பலூர் மாவட்ட  டிவிஎஸ் நிறுவனத்தின் ஊழியர்களும்  கலந்து கொண்டனர்.

 உலக தண்ணீர் தினத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு விருந்தினர்களுக்கு தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட்ட நீரை  மறுசுழற்சி செய்யப்பட்டு விளைவிக்கப்பட்ட காய்கறிகள்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது.



# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

#டெலிகிராம் மூலமும் அறிய....  https://t.me/trichyvisionn