வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட 15 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஓராண்டுகளுக்கு முன்பு வரை வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கத்தை கடத்தி வந்து குருவிகளாக இயங்கி வந்தவர்கள் மீது சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட காரணத்தினால் சுமார் ஆறு மாத காலங்களுக்கு தங்கம் கடத்தல் திருச்சி விமான நிலையத்தில் குறைந்து இருந்தது.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக அதிக அளவில் திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. அந்த வகையில் சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு வந்த இண்டிகோ விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்தை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சசிக்குமார் (30) என்ற பயணியின் நடவடிக்கை மீது சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர். அவர் தான் அணிந்திருந்த உள்ளாடையில் மறைத்து பேஸ்ட் வடிவிலான ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான 300 கிராம் கடத்தல் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து அவரிடமிருந்து கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த சுகத்துறை அதிகாரிகள் அவரிடம் தொடர்பு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO